2012 ஆமாண்டு மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக றோஹிங்கியா சிறுபான்மை போராளிகள் ஆயுதம் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மியான்மார் அரசும் இராணுவமும் வன்முறையையும் அடக்குமுறையையும் றோஹிங்கியாக்கள் மீது திணித்தது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
நொதி திறனின் பரிணாம வளர்ச்சியைப் பயன்படுத்தி உயிர் எரிபொருள் முதல் மருந்துகள் வரை பல்வகைப் பட்ட பதார்த்தங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தமைக்காக, 2018 ஆமாண்டின் வேதியியலுக்கான (இரசாயனவியலுக்கான) நோபல் பரிசு அமெரிக்காவின் இரு விஞ்ஞானிகளுக்கும், பிரிட்டன் ஆராய்ச்சியாளருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோடிக் கணக்கான கணக்குகள் மீது ஹேக்கிங் தாக்குதல்?
கடந்த வார இறுதியில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 9 கோடி மக்களின் ஃபேஸ்புக் கணக்கு விபரம் ஹேக் செய்யப் பட்டதாகவும், இந்த மர்ம தாக்குதலை செய்தது யார் அல்லது எந்த நிறுவனம் என்ற தகவல் இதுவரை தெளிவாக வெளிவரவில்லை என்றும் செய்திகள் கசிந்துள்ளன.
2018 ஆமாண்டின் இயற்பியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
புற்று நோய் சிகிச்சைக்கு புதுவிதமான நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை என்ற முறையை உருவாக்கியதற்காக 2018 ஆமாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
சுனாமி தாக்கிய சுலவேசி மாகாணத்தில் எரிமலை சீற்றம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தில் சிக்கி 1400 இற்கும் அதிகமான மக்கள் பலியாகியும் 3 இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்படைந்தும் உள்ள நிலையில் இந்த அனர்த்தங்கள் தாக்கிய அதே சுலவேசி மாகாணத்திலுள்ள சோபுடான் எரிமலை புதன்கிழமை காலை வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உடைந்த சிறைகளில் இருந்து 1200 கைதிகள் தப்பி ஓட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பாலு, டொங்கலா பகுதிகளில் அளவுக்கதிகமாக கைதிகள் அடைக்கப் பட்டிருந்த சிறைகள் சேதமுற்றதால் அவற்றில் இருந்து சுமார் 1200 கைதிகள் வரை தப்பிச் சென்று விட்டதாக ஸ்ரீ புகு உட்டாமி என்ற நீதித்துறை அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் புதின் விஜயத்தின் போது S-400 ரக ஏவுகணை ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியா
எதிர்வரும் வாரம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான வருடாந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.