சீனாவின் முக்கிய சில பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் சரக்கு விமானங்களில் பணி புரிபவர்கள் மூலம் அங்கிருக்கும் தலைநகர் பீஜிங் உட்பட முக்கிய சில பகுதிகளில் மீண்டும் கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியிருப்பதாகவும், இதுவும் சமூகப் பரவலாக மாறும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிற்சர்லாந்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து கடுங்குளிர் !
சுவிற்சர்லாந்தின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த கடும் பனிப்பொழிவினைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் அதி கூடிய குளிர்நிலை பதிவாகியுள்ளது. இந்த பிராந்தியங்களில் குளிர்நிலை -15 ° C க்கும் அதிகமாகப் பதவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு, போக்குவரத்துச் சேவைகள் முடங்கின, மலைப்பிரதேசங்களில் பனிச்சரிவு அபாயம் !
சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நிலவும் மோசமான காலநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளன.
சுவிற்சர்லாந்தில் புதிய அறிவிப்புக்கள் : ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்தவை மூடல் !
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகளை இன்று தலைநகர் பேர்ணில் மத்திய கூட்டாட்சித் தலைவரும், பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் தலைவருமான கை பர்மெலின் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.
இத்தாலியில் இன்று முதல் மார்ச் 5ந் திகதி முறை வைரஸ் தொற்று புதிய விதிகள் !
இத்தாலியில் இன்று ஜனவரி 16 ம் திகதி முதல் மார்ச் 5ந் திகதி வரை தொடரவுள்ள புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை இத்தாலிய பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கான புதிய அவசர ஆணையில் பிரதமர் கயூசெப் கோன்டே நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கையெழுத்திட்டார்.
இத்தாலியில் பிரதமர் கொண்டே அரசுக்கு நெருக்கடி !
இத்தாலியப் பாராளுமன்றத்தில், ஆட்சியதிகாரத்திலுள்ள பிரதமர் கொண்டே அரசுக்கு, ஆதரவு வழங்கிய கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் விலகியதால் இத்தாலிய அரசாங்கம் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
அணுவாயுதத் திட்டத்தை வலுப்படுத்த வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவு!
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்க சில நாட்களே உள்ள நிலையில், வடகொரியாவில் சமீபத்தில் நடந்த ஆளும் கட்சிக் கூட்டம் ஒன்றில், தமது நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை வலுப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவு பிறப்பித்திருப்பதாக புதன்கிழமை உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.