இத்தாலியின் சிசிலித்தீவின் தலைநகர் பலேர்மோவில், கடந்த புதன்கிழமை இரவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1790ம் ஆண்டுக்குப் பின் 200 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ளமாக பிராந்திய அதிகாரிகள் இதனைப் பதிவு செய்துள்ளனர்.

Read more: இத்தாலியை 200 ஆண்டுகளின் பின் கடுமையாகத் தாக்கிய கோடைமழையும் பெருவெள்ளமும் !

இன்று காலை பப்புவா நியூ கினியாவில் வலுவான நிலஅதிர்வு உலுக்கியதையடுத்து, கடலோர கிராமங்களில் தேசம் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: பப்புவா நியூ கினியா தீவில் வலுவான நில அதிர்வு

சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப் படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு கொண்டு வந்த கட்டுப்பாட்டை பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Read more: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாட்டை ரத்து செய்தார் டிரம்ப்!

இங்கிலாந்தில் ஏப்பிரல் மத்தியில் இருந்து, ஜூன் இறுதி வரை இலண்டன் பல்கலைக் கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வொன்றில் கோவிட்-19 தொற்று லாக்டவுன் காலப் பகுதியிலும், அதற்குப் பின்பும் கிட்டத்தட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புகைப் பிடித்தலைக் கைவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Read more: கோவிட்-19 அச்சத்தால் இங்கிலாந்தில் இலட்சக் கணக்கானவர்கள் புகைப் பிடித்தலை நிறுத்தம்?

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more: 2020 சுவிஸின் ஆயுத ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு - கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பில்லை !

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.