கோவிட்-19 எனப்படும் கொரோனா பெரும் தொற்று 2019 இறுதியில் பரவ ஆரம்பித்த சீனாவில் இது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை அறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள முயலும் நிபுணர்களுக்கு சீனா இதுவரை அனுமதி அளிக்காததற்கு உலக சுகாதார அமைப்பான WHO அதிருப்தி தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் விடுமுறைக்குப் பின் நோய்த்தொற்றுகள் அதிகரித்தால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் வரலாம் !
சுவிற்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, புதிய நோய்த்தொற்றுகள் குறிப்பிடத்தக்க அளவை எட்டியுள்ளன.
சுவிற்சர்லாந்தில் கோவிட் 19 வைரஸ் தொற்று - 2021ல் எவ்வாறிருக்கும் ?
"கோடையில் நாங்கள் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் நாங்கள் அவ்வாறு செய்ய முடியாமல் வெகு தொலைவில் இருந்தோம்" என்று சுவிஸ் மத்திய கூட்டமைப்பு நடப்பாண்டின் புதிய தலைவர் கை பார்மலின் தெரிவித்துள்ளார்.
யுரேனியம் செறிவூட்டலை 20% வீதம் அதிகரிக்கும் முடிவில் ஈரான்! : ஆர்ஜெண்டினாவில் கருக்கலைப்புச் சட்டம் அனுமதி
அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஈரான் மீண்டும் தனது யுரேனியம் செறிவூட்டலை 20% வீதம் அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது.
இங்கிலாந்து புதிய வைரஸ் தொற்றால் முடங்குகிறது - பெப்ரவரி நடுப்பகுதிவரை நாடாளவிய பூட்டுதலுக்கு உத்தரவிட்டார் பிரதமர் !
இங்கிலாதில் புதிய வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த நாடாளவிய பூட்டுதலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2021 ஜனவரி 4 திங்கட்கிழமை லண்டனில் அவரது வாசஸ்தலமான 10 டவுனிங் தெருவில் இருந்து ஒரு அவசர தொலைக்காட்சி உரையை நிகழ்த்தினார்.
பெப்ரவரியில் செவ்வாய்க் கிரக ஆர்பிட்டரில் நுழைகின்றது சீன விண்கலம்!
செவ்வாய்க் கிரகத்துக்கான சீனாவின் முதலாவது விண்கலமான டியான்வென் - 1 ஏவப்பட்ட 163 நாட்களில், ஞாயிற்றுக்கிழமை காலை வரை 400 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் இரு தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி! : டோக்கியோவில் அவசர நிலை
ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களது இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகாலச் சூழலின் கீழ் மத்திய அரசால் அனுமதி வழங்கப் படுகின்றது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.