கடல் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது முன்பு கணிக்கப்பெற்றதை விடவும் அதிவேகமாக நிகழ்வதாகவும், பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் பேரூந்து ஆற்றில் விழுந்து 15 பேர் பலி !
நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்ததில், 15 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிய வருகிறது.
ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் மேலும் 200 பேர் கைது!
ஹாங்கொங்கில் மிகவும் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக மேலும் 200 பேரைக் கைது செய்துள்ளனர் ஹாங்கொங் போலிசார்.
பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து வலிமையான நிலநடுக்கங்கள்! : 6 பேர் பலி, பலத்த சேதம்
வியாழக்கிழமை பிலிப்பைன்ஸின் மிண்டனா தீவுப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் தாக்கியது.
மாலியில் ISIS மோசமான தாக்குதல்! : 53 இராணுவத்தினர் பலி
வெள்ளிக்கிழமை வடக்கு மாலியின் மேனாகாவில் அமைந்துள்ள இராணுவப் பாசறை ஒன்றின் மீது நடத்தப் பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு 53 இராணுவத்தினரும் 1 குடிமகனும் உட்பட 54 பேர் பலியாகி உள்ளனர்.
ஆசியான் நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா அறிவிப்பு
தென்சீனக் கடலில் கேந்திர முக்கியத்துவமும் கடல் வளமும் நிறைந்துள்ள பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இதனால் சீனாவுக்கும், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பல தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகின்றது.
அசாஞ்சேயின் நிலை கவலைக்கிடம் - ஐ.நா. நிபுணர் நில்ஸ் மெல்சர்
அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள விக்கிலீக்ஸ்’ இணைய தளநிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) யின் நிலை குறித்து, ஐ.நா.வின் நிபுணர் நில்ஸ் மெல்சர் கவலை தெரிவித்துள்ளார்.