ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள சென்ட் ஜோர்ஜ் வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியும், 150 பேர் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

Read more: ரஷ்யாவில் துயரம்! : கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 5 பேர் பலி!

கோவிட்-19 கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவின் ஹுபேய் மாகாணத்தைச் சேர்ந்த வுஹான் நகரில் 11 வார கால ஊரடங்கு ஏப்பிரல் 8 ஆம் திகதி தளர்த்தப் பட்டு அங்கு பொது மக்கள் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியிருந்தன.

Read more: வுஹான் நகரில் கொரோனாவின் 2 ஆவது அலை! : அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தனிமை!

இத்தாலி மத்தி அரசுக்கும், பிராந்திய ஆளுனர்களுக்கும் இடையிலான முறுகல் வலுத்தமையால், பிராந்திய தலைவர்களின் கூட்டத்தில், இரண்டாம் கட்ட தளர்வு நிலையினை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இத்தாலிய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: இத்தாலி மத்திய அரசுக்கும் பிராந்திய ஆளுனர்களுக்கும் இடையில் முறுகல் !

முதலில் Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ அண்மைய தகவல் படி உலகம் முழுதும் 212 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று குறித்த முக்கிய புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...

Read more: கொரோனா பாதிப்பில் உலக அளவில் ரஷ்யா 4 ஆவது இடம்!

சுவிற்சர்லாந்தில் அடுத்து வரவிருக்கும் மாதங்களில், வைரஸ் சுமக்கும் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதும், அவர்களின் அனைத்து தொடர்புகளையும் தனிமைப்படுத்துவதும், மிக முக்கியமானதாக இருக்கும் என சுவிஸ் சுகாதார அமைச்சர் கூறினார்.

Read more: சுவிற்சர்லாந்தில் வைரஸ் சுமக்கும் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவது முக்கியம் : அலைன் பெர்செட்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நன்றாகக் குறைந்து வருவதாக சுவிஸ் மத்தி சுகாதாரத்துறையின் இன்றைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந் 24 நேரத்தில் சுவிற்சர்லாந்தில் நாடாளவிய ரீதியில், 36 புதிய தொற்று அறிவிப்புக்கள் மற்றும் 18 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Read more: சுவிட்சர்லாந்தில் குறைந்து வருகிறது தொற்று : திசினோவில் புதிய தொற்று இறப்பு இல்லை !

கோவிட் -19 கட்டுப்பாடுகளின் தளர்வு நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவுடனான 15 சுவிஸ் எல்லைக் கடப்புகள் இன்று திங்கட் கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சென்ற மார்ச் 25 ஆம் திகதி சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு எல்லைகளை மூடியது.

Read more: சுவிற்சர்லாந்தின் 15 எல்லைக் கடவைகள் இன்று திறக்கப்பட்டன !

More Articles ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :