டுவிட்டரில் இதுவரை நீங்கள் பயன்படுத்தாத சில வசதிகள் - 1 #4tamilmediatips
- Wednesday, 03 October 2012 11:56
டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் அரைவாசிக்கு மேல் குறைந்தது 6 -பிராண்டுகளையாவது பின் தொடர்வதாக அண்மையில் அறிவித்துள்ளது டுவிட்டர் நிறுவனம்.
அப்படி முக்கியத்துவம் பெற்றுவிட்ட டுவிட்டரில் தங்களது நேரத்தை அதிகளவில் செலவு செய்பவர்கள் அதிலுள்ள புதிய வசதிகள் பற்றி தெரியாதிருக்கலாம்.
அவ்வாறு பயன்படக்கூடிய டுவிட்டர் டிப்ஸ் சில இங்கே.
#WelcomeToTwitter
புதிதாக டுவிட்டரில் இணைபவர்களுக்கு டுவிட்டரில் யாரையெல்லாம் தொடரவேண்டும் என்பதை நீங்கள் சொல்லிக்கொடுக்கலாம்.
இதைச் செய்ய ஒரு லிஸ்ட்டை உருவாக்கி அதன்
Description இல் #WelcomeToTwitter என்ற Tag ஐ கொடுத்துவிட்டால் சரி.
உங்கள் தளத்திலிருந்து டுவிட்டரில் புதிதாக இணைபவர்களுக்கு நீங்கள் உருவாக்கிய லிஸ்ட் அறிமுகமாகும்.
Shortcuts
டுவிட்டரில் மவுஸை பயன்படுத்தாமல் கீபோட் சாட்கட் மூலமும் சில தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு சில
"N" அழுத்தினால் புதிய டுவிட் ஒன்றை கம்போஸ் செய்யலாம்.
"GH" மூலம் ஹோம்பேஜ்ஜிற்கு செல்ல முடியும்.
"?" தட்டுங்கள் டுவிட்டர் கீபோட் ஷாட்கட் கீகள் அனைத்தும் படத்திலுள்ளது போல் பட்டியலிடப்படும்.
மேலும் உங்களுக்கு தெரிந்த டுவிட்டர் டிப்ஸ்களை #4tamilmediatips என்ற Tag இல் அல்லது @4tamilmedia என்ற டுவிட்டர் பக்கத்துடன் பகிருங்கள்.
4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

.jpg)