டுவிட்டரில் இதுவரை நீங்கள் பயன்படுத்தாத சில வசதிகள் - 2 #4tamilmediatips
- Monday, 08 October 2012 05:41
டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் அரைவாசிக்கு மேல் குறைந்தது 6 -பிராண்டுகளையாவது பின் தொடர்வதாக அண்மையில் அறிவித்துள்ளது டுவிட்டர் நிறுவனம்.
அப்படி முக்கியத்துவம் பெற்றுவிட்ட டுவிட்டரில் தங்களது நேரத்தை அதிகளவில் செலவு செய்பவர்கள் அதிலுள்ள புதிய வசதிகள் பற்றி தெரியாதிருக்கலாம்.
அவ்வாறு பயன்படக்கூடிய டுவிட்டர் டிப்ஸ் சில இங்கே.
The Fast Follow Program மூலம் கைத்தொலைபேசிக்கு டுவிட்டர் தகவல்கள் கிடைக்கச் செய்தல்
டுவிட்டரில் வேகமாக தொடருதல் என்ற இந்த வசதி மூலம் குறிப்பிட்ட டுவிட்டர் பாவனையாளரை தொடர்ந்தால் அங்கு கிடைக்கும் புதிய விடயங்கள் உங்கள் கைத்தொலைபேசிக்கு SMS ஆக கிடைக்கும் படி செய்துவிடலாம்.
இதை ஆக்டிவேட் செய்ய Follow @username என்ற Text ஐ 40404 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள்.
இவை தொடர்பான மேலதிக விடயங்கள் இங்கே : Introducing Fast Follow, and other SMS tips
இவ்வசதி மூலம் பூகம்பம் , வெள்ளப்பெருக்கு போன்ற தருணங்களில் அவை பற்றிய தகவல்களை செய்திச்சேவையை தொடர்வதன் மூலம் உடனே பெறமுடியும்.
Advanced Search
டுவிட்டரின் தேடுதல் வசதியுள்ளது உங்களுக்கு தெரியும். ஆனால் வலப்பக்க மேல் மூலையில் இருக்கும் gear button ஐ அழுத்தி “Advanced Search.” சென்றால் இன்னும் சிறப்பாக தகவல்களை தேடிப் பெற முடியும்.
positive ( :) ), negative ( :( ) என்ற அடையாளங்களை தெரிவு செய்யவும் ஆப்ஸன் உள்ளது. இவற்றின் மூலம் தேடுதலில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தகவல்களை தேடவும் முடிகின்றது என்பது புதிய தகவல்.
டுவிட்டரில் சாட்டிங்க் லிஸ்ட்
இந்த இணைப்பிலுள்ள கூகுள் டாக்குமென்ட்டில் டுவிட்டர் சாட்டிங்கில் இணைய வேண்டிய லிஸ்ட் தொகுக்கப்பட்டுள்ளது.

.jpg)