Sunday, May 19th

Last update10:35:12 PM

முதலில் யார் நிறுத்துவது...?

நாயகன் படத்தில் வரும் வேலுநாயக்கர் கமலஹாசன் ஒரு இடத்தில் 

'அவன நிறுத்தச் சொல்லு முதல்ல ..' என்றொரு வசனம் பேசும் கட்சிதான் நினைவுக்கு வருகிறது, அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பம், அதற்கெதிரான போராட்டங்களும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்பக் கருத்துக்களுக்குக் களம் கொடுக்கும்  அமெரிக்கா, தன்னளவில் கொள்ளும் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கேள்வி எழுப்புகிறது, Abdul Wahab என்பவரின் பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டுள்ள பின்வரும் குறிப்பு.

1993ஆம் ஆண்டு "லைலா அல் அத்தார்" என்னும் ஈராக் நாட்டு ஓவியர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு நேரத்தில் அமெரிக்க ஏவிய மூன்று ஏவுகணைகளால் தாக்குதலால் நடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.அவரது வீடு தரை மட்டமாகப்பட்டது. " லைலா" செய்த குற்றம் என்ன?

அவர் பாக்தாத் நகரின் "அர்ராஷித்" ஹோட்டலின் நடை பாதையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்(1) இன் உருவப்படத்தை வரைந்தார். அதை மக்கள் மிதித்து சென்றனர்.

அமெரிக்காவுக்கு தன் அதிபரின் இந்த இழிவுபடுத்தலை ஜீரணிக்க முடியவில்லை. அதற்குத்தான் இந்த தண்டணை! சாதாரண ஒரு தலைவரின் படத்தை நடைபாதையில் வரைந்ததற்கு அமெரிக்கா தந்த தண்டணை இதுவென்றால், கோடிக்கணக்கானோர் தன்னுடய இதயங்களில் இறைவனுக்கு அடுத்தபடியாக உயர்ந்த, கண்ணியமிக்க இடத்தை முஸ்லிம்கள் தந்துள்ளார்கள்.

இத்தகு சூழலில் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அமெரிக்க அரசு, கிரிஸ்தவ உயர் தலைமை பீடங்கள் (பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் ம் இந்த படத்திற்கு ஒரு தயாரிப்பாளர் ) மௌனம் காப்பதும், கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் கயமைத்தனம் நிரம்பிய சாம் பாஸிலுக்கு துணை போவதையும் நியாயம் கற்பிப்பது எங்ஙனம் எடுத்துக்கொள்வது? - zafar rahmani

சொல்லுங்கள் முதலில் யார் நிறுத்துவது என..?

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus