Top Stories

Grid List

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். 

Top Stories

Grid List

பொதுத் தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்காவது நபர் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் மரணமடைந்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் மரணமடைந்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீலங்கன் விமான சேவையானது, ஏப்ரல் 08 முதல் 21ஆம் திகதி வரை தனது அனைத்து விமான பயண சேவைகளையம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

இந்தியப் பிரதமர் மோடி, கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும், மூன்று வாரகாலத்துக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் திகதி தொலைக்காட்சியில் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பிரச்சினை உலகமே எதிர்கொள்ளும் பெரும் சுகாதாரப்பிரச்சினை. ஆனால் இங்கு அதனைச் சிலர் மதப்பிரச்சினையாக, சமூக பிரச்சனையாக மாற்ற முயல்கிறார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமாகிய குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகக் குறிப்புக்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரிகிறது. ஆயினும் அது இன்னமும் வேகமாகவில்லை.

தமிழகத்திற்கு வந்த மலேசியத் தமிழர்கள் சிலர், மலேசியா திரும்ப முடியாமல் தவித்த நிலையில், அவர்களை மலேசியத் தொழிபதிபர் ஒருவர் தனிவிமானம் மூலம் மலேசியா திரும்புவதற்கு உதவி செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தாபகர் மற்றும் இயக்குனரும், உலகின் முக்கிய செல்வந்தருமான பில்கேட்ஸ் அவர்கள் நிகழ்கால கொரோனா பெரும் தொற்று நோயின் போக்கு மற்றும் அதற்கு எதிரான இறுக்கமற்ற கட்டுப்பாடுகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றின் பாதிப்பைக் குறைப்பதற்கு சிங்கப்பூரில் ஏப்பிரல் 7 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி இதுவரை சுமார் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய புள்ளி விபரம் கீழே :

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவுள்ள நாடுகளில் சுவிற்சர்லாந்தும் ஒன்று. நாட்டின் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் இங்கு நோய் பரவும் வீதம் அதிகமாகக் கணிக்கப்பெற்றாலும், சுவிஸ் மக்கள் அச்ச உணர்வு குறைந்தவர்களாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Top Stories

Grid List

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும்  கொரோனாவால் மிகவும் அல்லாடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் சென்னைக்குத் திரும்பியிருந்தார் ஸ்ருதிஹாசன்.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'.

பார்த்திபன் என்றால் புதுமை என்று பொருள். கொரோனா வைரஸ் நெருக்கடியிலும் தனது புதுமை செய்கைகளை செய்ய அவர் தயங்கவில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கரை சந்தித்துப் பாராட்டச் சென்ற பார்த்திபன் பூங்கொத்துக்கு பதிலாக என்ன கொடுத்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

விஜய் நடித்து முடித்திருக்கும் ‘மாஸ்டர்' படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், விஜய்யின் 65-வது படத்தை யார் இயக்குவது என்பதில் விஜய் இம்முறை ரொம்பவே குழப்பத்துக்கு ஆளானார்.

'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இன்று 8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவின் மூன்றாவது நாள். சென்ற 19ந் திகதி ஆரம்பமாகிய இவ்விழாவில் மிகச் சிறந்த ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும், 92வது ஆஸ்கர் விருது விழாவில், தென் கொரியப் படமான " பாரசைட்" ( Parasite)சிறந்த படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.

இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.

தமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.

தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்‌ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.

திரௌபதி என்ற பெயரைக் கேட்டாலே நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவில் வருவது பாரத பெருங்காப்பியத்தின் தலைவி திரவுபதியின் சபதம் தான் . திரவுபதியை தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே திராவிடர்கள் காத்து வருகிறார்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் திரௌபதி வழிபாடு ஆழமாக வேரூன்றிய ஒன்று.

மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது.

முதலில் ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எப்போதும் எந்தவொரு பார்வையாளருக்கும் மாறிலி என்பதையும் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் எதுவும் பயணிக்காது என்பதையும் அறிந்து கொள்வோம்.

பகுதி 1 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17644-who-faq-on-covid-19

பகுதி 2 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17658-covid-19-who-faq-part-2

பகுதி 3 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17669-who-faq-on-covid19-part-3

பகுதி 4 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17679-who-faq-on-covid-19-part-4


இந்த வைரஸ் மேற்பரப்புக்களில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயற்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்கள் உட்பட) சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை மேற்பரப்பில் தொடர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெவ்வேறு நிலைமைகளின் கீழ் மாறுபடலாம் (உதாரணம்: மேற்பரப்பு வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்).

ஒரு மேற்பரப்பு பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அதை சுத்தம் செய்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும். ஆல்கஹால் அடிப்படையிலான திரவத்தை உபயோகித்து உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


கோவிட்-19 பாதிக்கப் பட்டதாக அறியப் படும் ஒரு பிரதேசத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது பாதுகாப்பானதா?

ஆம். பாதிக்கப்பட்ட நபர் வணிகப் பொருட்களை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் ஒரு தொகுப்பிலிருந்து நகர்த்தப்பட்டு, பயணிக்கப்பட்டு தொற்றுவது என்பது வெவ்வேறு நிலைமைகள் மற்றும் வெப்பநிலைக்கு உட்பட்டது என்ற போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட அது தொற்றுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும். இது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன.


கோவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப் படாது இருக்க நான் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்கள் ஏதும் உள்ளனவா?

பின்வரும் நடவடிக்கைகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக வலிமையான விளைவை ஏற்படுத்தாத அதேநேரம் உங்களை ஓரளவு பாதிக்கக் கூடியதே ஆகும்.

1.புகை பிடித்தல்
2.பல முகக் கவசங்களை ஒன்றாக அணிதல்
3.ஆண்டிபயோட்டிக்ஸ் எடுத்தல் (பகுதி 3 ஐப் பார்வையிடுக)

எவ்வாறாயினும், உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மிகவும் கடுமையான தொற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க மருத்துவ உதவியை நாடுங்கள், மேலும் உங்கள் சமீபத்திய பயண வரலாற்றை உங்கள் சுகாதார வழங்குனருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி.... நிறைவு...

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

 

 

 

 

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவர் ரொம்ப யோசித்து பண்ணிய ஐம்பதாவது படம்தான் ‘மங்காத்தா’.

குள்ளமான உருவம் ஆனால் அந்த உருவத்திலிருந்து வெண்கலமாய் ஒலிக்கும் கம்பீரமான குரல். அதுதான் பரவை முனியம்மா. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் தனித்து விளங்கியவர்.

இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு. சினிமாப் படப்பிடிப்புக்கள் இல்லை. படக்காட்சிகளும் இல்லை.

இந்தியாவிலும், தமிழகத்திலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு விழிப்புணர்வு  வீடியோ செய்தினை வெளியிட்டிருக்கின்றார்.

அலுவலகம் விட்டு வந்தால் வீடு, வீடு விட்டு வந்தால் அலுவலகம் எனும் காலம் போய் இப்போது வீடு மட்டும்தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

செந்தில் ராஜலெட்சுமி சுப்பர் சிங்கர் இசைப் போட்டியினால் பிரபலமான கிராமியக் கலைத் தம்பதிகள். இவர்கள் இருவரும் சமூக அக்கறை குறித்த விடயங்களில், ஆர்வமும், அதனைத் தங்கள்பாடல்கள் மூலம் வெளிப்படுத்துவதிலும் தேர்ந்தவர்கள்.

இந்தியாவில் சினிமா பிரபலங்கள் சிலரின் கோவிட் -19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள். பிரதமர் மோடி அறிவுறுத்திய மருத்துவப் பணியாளர்களுக்கான மரியாதைக் கரவொலி என்பன. 

இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது.

இலங்கை

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சரின் வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு,

பத்திரிகையாளர் கேள்வி:- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்:- 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.

இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

BLOG COMMENTS POWERED BY DISQUS