Top Stories

Grid List

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். 

Top Stories

Grid List

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தைக் மீண்டும் கூட்டுவதா, இல்லையா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை கோரியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

சித்திரைப் புத்தாண்டு காலத்துக்குப் பின் இடர் நிலையற்ற மாவட்டங்களில் ஊரடங்கினை விலக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை இரவு 10.00 மணி நிலவரப்படி, 166ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்று அறிகுறி வெளித்தெரியாமல், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் பரவியிருக்கலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறவேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் விடுத்திருக்கும்  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பரவுதலைத் தடுத்து விட முடியுமென நம்புவதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழகத்தில் எடுக்கப்ட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14ந் திகதி வரை கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு, பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைபைப் பொறுத்தே நோயின் பாதிப்பு மற்றும் பரவல் என்பன கட்டுக்குள் இருக்கும் என்று அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 3 வார காலங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாடே பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அன்றாடத் கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டுக் கீழே வாழும் மக்கள், பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசும், தொண்டு நிறுவனங்களும், இயன்றவரையில் உதவிகள் வழங்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் உலகுக்கு அறிவித்த தனிமைப்படுத்தல், சமூகப் பாதுகாப்பு, என்பதற்குப் பின்னால் ஒரு புதிய ஒழுங்குக்கு உலகம் தயராகிறது எனும் கருதுகோள்கள் கூறப்படுகின்றன. அவற்றினால் தனிமனித சுதந்திரம், தனியுரிமை என்பன பறிபோகலாம் என்ற அச்சமும், அவை பாதுகாக்கப்பட வேண்டுமெனும் அக்கறைகளும் எழுந்துள்ளன. இது தொடர்பில் விவாதங்களும் பேச்சுக்களும் ஆரம்பமாகியுள்ளன.

மார்ச் 21க்குப் பின்னர் கொரோனா வைரஸின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலி இன்று முதல் முறையாக சற்று ஆசுவாசம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

உலக அளவில் கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாகி வரும் நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடான அமெரிக்கா மருந்து உபகரணங்களைக் கடத்தியுள்ளதாக ஜேர்மனியும், கனடாவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.

இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்த ஆயிரக் கணக்கான தனது மக்களுக்கு நாடளாவிய ரீதியில் தேசிய அஞ்சலி செலுத்தியது சீனா.

Top Stories

Grid List

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி மார்ச் 26-ஆம் தேதி வெளியாக இருந்த படம் ‘மரக்கார்; அரபிக்காடலிண்டே சிம்ஹம்’. இந்நிலையில் கரோனா பாதிப்பால் கேரளத்தில் முன்னதாகவே திரையரங்குகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் நின்றுபோனது.

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும்  கொரோனாவால் மிகவும் அல்லாடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் சென்னைக்குத் திரும்பியிருந்தார் ஸ்ருதிஹாசன்.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'.

பார்த்திபன் என்றால் புதுமை என்று பொருள். கொரோனா வைரஸ் நெருக்கடியிலும் தனது புதுமை செய்கைகளை செய்ய அவர் தயங்கவில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கரை சந்தித்துப் பாராட்டச் சென்ற பார்த்திபன் பூங்கொத்துக்கு பதிலாக என்ன கொடுத்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இன்று 8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவின் மூன்றாவது நாள். சென்ற 19ந் திகதி ஆரம்பமாகிய இவ்விழாவில் மிகச் சிறந்த ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும், 92வது ஆஸ்கர் விருது விழாவில், தென் கொரியப் படமான " பாரசைட்" ( Parasite)சிறந்த படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.

இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.

தமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.

தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்‌ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.

திரௌபதி என்ற பெயரைக் கேட்டாலே நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவில் வருவது பாரத பெருங்காப்பியத்தின் தலைவி திரவுபதியின் சபதம் தான் . திரவுபதியை தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே திராவிடர்கள் காத்து வருகிறார்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் திரௌபதி வழிபாடு ஆழமாக வேரூன்றிய ஒன்று.

மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது.

முதலில் ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எப்போதும் எந்தவொரு பார்வையாளருக்கும் மாறிலி என்பதையும் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் எதுவும் பயணிக்காது என்பதையும் அறிந்து கொள்வோம்.

பகுதி 1 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17644-who-faq-on-covid-19

பகுதி 2 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17658-covid-19-who-faq-part-2

பகுதி 3 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17669-who-faq-on-covid19-part-3

பகுதி 4 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17679-who-faq-on-covid-19-part-4


இந்த வைரஸ் மேற்பரப்புக்களில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயற்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்கள் உட்பட) சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை மேற்பரப்பில் தொடர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெவ்வேறு நிலைமைகளின் கீழ் மாறுபடலாம் (உதாரணம்: மேற்பரப்பு வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்).

ஒரு மேற்பரப்பு பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அதை சுத்தம் செய்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும். ஆல்கஹால் அடிப்படையிலான திரவத்தை உபயோகித்து உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


கோவிட்-19 பாதிக்கப் பட்டதாக அறியப் படும் ஒரு பிரதேசத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது பாதுகாப்பானதா?

ஆம். பாதிக்கப்பட்ட நபர் வணிகப் பொருட்களை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் ஒரு தொகுப்பிலிருந்து நகர்த்தப்பட்டு, பயணிக்கப்பட்டு தொற்றுவது என்பது வெவ்வேறு நிலைமைகள் மற்றும் வெப்பநிலைக்கு உட்பட்டது என்ற போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட அது தொற்றுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும். இது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன.


கோவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப் படாது இருக்க நான் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்கள் ஏதும் உள்ளனவா?

பின்வரும் நடவடிக்கைகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக வலிமையான விளைவை ஏற்படுத்தாத அதேநேரம் உங்களை ஓரளவு பாதிக்கக் கூடியதே ஆகும்.

1.புகை பிடித்தல்
2.பல முகக் கவசங்களை ஒன்றாக அணிதல்
3.ஆண்டிபயோட்டிக்ஸ் எடுத்தல் (பகுதி 3 ஐப் பார்வையிடுக)

எவ்வாறாயினும், உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மிகவும் கடுமையான தொற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க மருத்துவ உதவியை நாடுங்கள், மேலும் உங்கள் சமீபத்திய பயண வரலாற்றை உங்கள் சுகாதார வழங்குனருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி.... நிறைவு...

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

 

 

 

 

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவர் ரொம்ப யோசித்து பண்ணிய ஐம்பதாவது படம்தான் ‘மங்காத்தா’.

குள்ளமான உருவம் ஆனால் அந்த உருவத்திலிருந்து வெண்கலமாய் ஒலிக்கும் கம்பீரமான குரல். அதுதான் பரவை முனியம்மா. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் தனித்து விளங்கியவர்.

இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு. சினிமாப் படப்பிடிப்புக்கள் இல்லை. படக்காட்சிகளும் இல்லை.

இந்தியாவிலும், தமிழகத்திலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு விழிப்புணர்வு  வீடியோ செய்தினை வெளியிட்டிருக்கின்றார்.

இத்தாலியின் பேர்கமோவில் ஒருவாரத்தில் புதிய கோவிட் -19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள், பேர்கமோவின் புதல்வர்கள். தன்னார்வப் பணியாளர்களாகத் திரண்ட நூற்றுக் கணக்கான இளளைஞர்களின் 10 000 மணி நேர உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த  வைத்தியசாலை.

அலுவலகம் விட்டு வந்தால் வீடு, வீடு விட்டு வந்தால் அலுவலகம் எனும் காலம் போய் இப்போது வீடு மட்டும்தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

செந்தில் ராஜலெட்சுமி சுப்பர் சிங்கர் இசைப் போட்டியினால் பிரபலமான கிராமியக் கலைத் தம்பதிகள். இவர்கள் இருவரும் சமூக அக்கறை குறித்த விடயங்களில், ஆர்வமும், அதனைத் தங்கள்பாடல்கள் மூலம் வெளிப்படுத்துவதிலும் தேர்ந்தவர்கள்.

இந்தியாவில் சினிமா பிரபலங்கள் சிலரின் கோவிட் -19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள். பிரதமர் மோடி அறிவுறுத்திய மருத்துவப் பணியாளர்களுக்கான மரியாதைக் கரவொலி என்பன. 

விளையாட்டு

கிரிக்கெட் சாதனைகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கும் ‘Hall of Fame’ விருது இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில், சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் சபை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், முத்தையா முரளிதரன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள முரளிதரன், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS