எமதுபார்வை

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையும் முன்னாள் போராளியொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். குறிப்பிடும்படியாக, இதுவரை 108 முன்னாள் போராளிகள் உயிரிழந்திருக்கின்றார்கள்.  

முன்னாள் போராளிகள் உயிரிழப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் பெரும்பான்மையானோர் புற்றுநோய்த் தாக்கத்தினாலேயே உயிரிழந்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரனும் புற்றுநோயினாலேயே கடந்த ஆண்டு உயிரிழந்திருந்தார். அவரின் உயிரிழப்பினைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளின் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் நச்சுக்கள் ஏற்றப்பட்டுள்ளனவா?, என்கிற கேள்வி எழுந்தது. பரவலாகவே அது பற்றிய உரையாடல்களும் நீண்டது.

இந்தநிலையில், நல்லிணக்கச் செயலணியின் கருத்தறியும் அமர்வொன்றில் கருத்துரைத்த முன்னாள் போராளியொருவர், புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு விச ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், உணவில் நச்சுக்கள் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதனையடுத்து, முன்னாள் போராளிகளின் மரணங்கள் பற்றிய சந்தேகங்கள் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளன. 

தொடர்ச்சியாக ஆயுத மோதல்களை எதிர்கொண்ட வடக்கு மாகாணத்தில் மக்களிடையே என்றைக்கும் இல்லாதளவுக்கு புதிய நோய்களின் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளிட்ட தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டிய தேவை பற்றியும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக, வன்னிப் பிரதேசத்தில் இந்த நோய்களின் அதிகரிப்பு சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. 

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மது மற்றும் புகைத்தல் உள்ளிட்ட பழக்கங்களுக்கு உட்பட்டவர்கள் அல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த அமைப்பிலிருந்தவர்களுக்கு அதிகப்படியான புற்றுநோய் தாக்கம் எவ்வாறு உருவானது என்கிற கேள்வியொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். புற்றுநோய் தாக்கத்துக்கு புகைத்தலும், மதுபாவனையும் மாத்திரம் காரணமல்ல என்கிற போதிலும், குறித்த கேள்வியை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது.

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் மற்றும் உடல்நிலை பாதிப்புக்கள் பற்றிய பலத்த உரையாடல்களை அடுத்து, வடக்கு மாகாண சபை தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கின்றது. அதாவது, முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் சர்வதேச வைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பிலானது அந்தத் தீர்மானம். அத்தோடு, முன்னாள் போராளிகள் அனைவரையும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் பதிவு செய்யுமாறும் கோரியுள்ளது. அதன்மூலம், ஒழுங்கமைக்கப்பட்ட வைத்தியப்பரிசோதனைகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்னொரு விடயமும் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியது. சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடலில் விச ஊசிகளோ, நச்சுக்களோ கலக்கப்பட்டால் அது, போர்க்குற்றங்களாக பதிவு பெறும். அதுபற்றியும் வடக்கு மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளது. 

ஆயினும், முன்னாள் போராளிகளின் உடலில் விச ஊசி ஏற்றப்பட்டமை மற்றும் நச்சுக்கள் கலக்கப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கமும், இராணுவமும் முற்றாக மறுத்திருக்கின்றது. 

எது எவ்வாறாயினும், முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் சந்தேகங்களுக்கு அப்பாலான வைத்தியப் பரிசோதனைகள் அவசியமாகின்றன. அதன்மூலம், பலமான தெளிவுகளைப் பெற முடியும். அத்தோடு, அதீத சுகயீனங்களுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் போராளிகளைக் காப்பாற்றவும் முடியும். 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.