எமதுபார்வை

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கும் தெற்கும் ஒன்றுக்கொன்று முரணாக வாக்களித்திருக்கின்றது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் என்றைக்கும் இல்லாதளவுக்கு வடக்கு- கிழக்கு மக்கள் அதிகளவான வாக்களிப்பினை பதிவு செய்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் என்கிற கொடூரக்கனவை ஏற்கனவே சந்தித்திருக்கிற தமிழ் மக்களும், அண்மைக்கால அடக்குமுறைகளினால் அலைக்கழிப்படும் முஸ்லிம் மக்களும் ஜனநாயக வெளிக்காகவே பெரும் அர்ப்பணிப்போடும் நேற்று வாக்களித்தார்கள்.

ஆனால், தென் இலங்கை மக்கள், பௌத்த சிங்கள பெருங்காவலன் அடையாளத்தைப் பேணும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற பெரும் இறுமாப்போடு வாக்களித்திருக்கின்றார்கள். ராஜபக்ஷக்களின் கடந்த கால ஆட்சிக்கால கொடூரங்களையெல்லாம் மன்னித்து மறந்து நின்று அவர்களை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதற்கு சிங்கள மக்கள் காட்டியிருக்கின்ற அர்ப்பணிப்பு அச்சுறுத்தும் அளவுக்கு உயர்த்திருக்கின்றது. ஒரு வெற்றி, வெற்றியில் பங்களிக்காத மக்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்துகின்றது என்றால், அது ஜனநாயகத்தின் பெருந்தோல்வியாகும். அப்படியானதொரு கட்டத்தையே, இந்த ஜனாதிபதித் தேர்தல் பதிவு செய்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கின்ற மாபெரும் வெற்றியானது, தென் இலங்கை மக்கள் என்கிற ஒற்றைத் தரப்பினால் வழங்கப்பட்ட ஒன்று. வடக்கு- கிழக்கு பகுதிகளில் அவரைத் தோற்கடிப்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குகள், இரண்டு பிரதேசங்களின் தேவையும், அரசியலும் வேறுவேறானவை என்பதைப் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மட்டுமே தேர்தல் வெற்றிகளைப் பெற முடியும் என்கிற நிலையின் எழுச்சியானது, சிறுபான்மை சமூகங்கள் மீதான பெரும் அச்சுறுத்தல்களுக்கு இன்னும் இன்னும் அடிகோலும். ஏற்கனவே, அவ்வாறான சிந்தனையின் எழுச்சியே, தெற்கை ஆட்டிப்படைத்து, நாட்டைச் சீரழித்துள்ள நிலையில், அதன் அடுத்தகட்டத்தினை இந்தத் தேர்தலும் பதிவு செய்திருக்கின்றது.

தமிழ்- முஸ்லிம் மக்களின் அடுத்த பத்து வருடங்களுக்கான எதிர்பார்ப்பு என்பது, ராஜபக்ஷக்களின் கடந்த கால ஆட்சிக்கு ஒப்பான ஒன்று மீண்டும் நிகழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக் கோசம் தெற்கில் ஏற்படுத்தியிருக்கின்ற கொண்டாட்ட மனநிலை என்பது, சிறுபான்மையின மக்களை பழிவாங்க வேண்டும் என்கிற அளவுக்கு எழுந்திருக்கின்றது. அதனையே, தென் இலங்கையின் வெற்றிக் கொண்டாட்டக் காட்சிகள் பதிவு செய்கின்றன.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'