எமதுபார்வை

ஐரோப்பாவில் குளிர் விலகியது. இரவும் இருளும் குறைந்து பகலும் வெளிச்சமும் நீளத் தொடங்கிவிட்டது. மரங்கள் துளிர்விடவும், அரும்புகள் மலரவும் வேனிற்காலம் ஆரம்பமாகிவிட்டது. கொண்டாட்டம் நிறைந்த பண்டிகைக் காலத்தில்மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள் என்பதில் அரசுகளும், அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது கோரோனா கோவிட் - 19 என்னும் நுன் உயிரி.

கொரோனா வைரஸுக்கு எதிரான போர் என்ற வகையில்லேயே அதற்கான தடுப்பு முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் எடுத்திருந்தன. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால், நாடுகளுடனான சண்டையில், மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக, ஆயுதத் தளவாடங்களைச் சேகரித்து வைத்த அத்தனை நாடுகளும், வைரசுக்கு எதிரான போரில் நிராயுதபாணிகளாகவே நின்று அல்லற்பட்டதைக் காண முடிந்தது.

வளர்முக நாடுகளில் ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் அரச படைகளுக்கு எதிராக அம்மண்ணின் மக்கள், கற்களையும், கையில் பட்டவைகளையும் எறிந்து எதிர்ப்பினைக் காட்டும் மக்களை பலதடவைகள் தொலைக்காட்சிச் செய்திகளில்,பார்த்திருக்கின்றோம். அவர்களுக்காகப் பரிதாபங்களும் பட்டிருப்போம். அவ்வாறான இயலாமையோடுதான் வல்லரசுகள் என மார்தட்டிக்கொண்ட நாடுகள் யாவும், வைரசுக்கு எதிரான போரில் கையில் கிடைத்ததையெல்லாம் வைத்துக் காப்பாற்ற முயற்சி செய்கின்றன.

அவ்வாறு தற்காத்துக் கொள்ளும் நடைமுறையில், தனிமைப்படுத்தல்களைக் கடைப்பிடித்த ஐரோப்பிய நாடுகள் அதற்காக வகுத்துக் கொண்ட அளவு ஈஸ்டர் விடுமுறை காலம். இதற்குள் எல்லாம் சரியாகிவிடும் அல்லது குறைந்து விடும் என நம்பின. ஆனால் யதார்தம் அவ்வாறில்லை என்றே நிபுணர்கள் சொல்கின்றார்கள். தம்மீது வைக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களுக்கு அரசாங்கங்கள் தலைவணங்கும் என்றும், அவ்வாறு தளர்த்த முற்படுகையில், COVID-19 ஐ திரும்ப அனுமதிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றார்கள்.

ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன...? என்பதனைக் கானொளியாகக் காணுங்கள் .

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.