எமதுபார்வை

" லைவ் ஒப் பீ " ஒரு சிறந்த திரைப்படம். கடல் விபத்தொன்றில் சிக்கும் கதாநாயகன் உயிர்பிழைத்துக் கொள்வதற்காகத் தொற்றிக் கொள்ளும் படகில் மறைந்திருக்கும் கொடிய புலியுடன் வாழப் பழகிக் கொள்வதுதான் கதையின் மூலம். ஏறக்குறைய அதுபோன்றதான வாழ்க்கையாகத்தான் சமகால மனிதவாழ்வு அமைந்து வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் தளர்த்தத் தொடங்குகின்றன. ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் மறைந்து விட்டது என்பதல்ல இதன் பொருள். மாறாக வைரசுடனான ஒரு வாழ்க்கைக்குத் தயாராகின்றன என்பதே பொருத்தமாக இருக்கும். இது விபரீதமான எண்ணம் ஆபத்தான முடிவு இல்லையா ? எனக் கேட்கத் தோன்றும். சந்தேகமில்லை: வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து எதுவும் இன்றுவரை உற்பத்திசெய்யப்படாத நிலையில் இது ஒரு சிக்கலான முடிவுதான். ஆனால் இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் தீரவேண்டும் எனும் கட்டாய நிலைக்கு வந்து விட்டது மனித குலம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.