எமதுபார்வை

இந்த உலகின் மோசமான விலங்கினம் மனிதனாகத்தான் இருக்க முடியும் என்பதனை இத்தனை அழிவுகளின் பின்னாலும் நிரூபித்து வருகிறது மனிதகுலம் என எண்ணத் தோன்றுகின்றது. இந்த உவமைக்குத் தேசம், மொழி, இனம், எனும் பாகுபாடுகள் ஏதும் இருப்பதாக கூடத் தெரியவில்லை.

அன்மைய கொரோனா கோவிட் 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக, உலகின் அனைத்து நாடுகளும் அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டபோது, இந்த உலகமே சுற்றுச் சூழலில் தூய்மைப்பட்டதாகப் பெருமைப்பட்டோம். ஆனால் அன்மைய தரவுகள் சிலவற்றை மேற்கோள் காட்டி, காற்றை சுத்தப்படுத்தி, பூமியை அழுக்காக்கத் தொடங்கிவிட்டோம் எனக் கவலைப்படத் தொடங்கியுள்ளார்கள் சூழலியலாளர்கள்.

எண்ணங்களின் முழுமையை கானொலியாகக் காண்க;

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.