கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களது, வெளியே சுற்றும் கலாச்சாரப் பழக்கத்தால், அரசுகள் பெரும் நெருக்குதலுக்குள்ளாகின்றன. இளைஞர்களைக் கண்டிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. சுவிற்சர்லாந்திலும் இத்தாலியிலும் கடந்த இருநாட்கள் நடந்த சம்பவங்களால், அரசும் காவல்துறையும் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளன.
" கொரோனா வைரஸ், அரசுகளும், ஊடகங்களும், ஊதிப் பெருப்பித்த ஒரு விடயம். அது வெறும் சாதாரண காச்சல்தான்.." என்கிறார்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து வெளியே வந்துள்ள இளைஞர்கள். ஆனால் " அவ்வளவு அலட்சியமாக அதை எடுத்துக் கொள்ளதீர்கள். அதன் இரண்டாவது அலை எவ்விதமாக எழும் என்பது எவருக்கும் தெரியாது. ஆதலால் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் பாதுகாப்பு உங்களுக்கு மட்டுமாகதல்ல..." என்கிறார்கள் தொற்று நோய் நிபுணர்கள் யார் சொல்வது சரி...!
விபரமாக அறிந்து கொள்ள கானொளித் தொகுப்பினைக் காண்க ;