எமதுபார்வை

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தொடக்கத்தினையும், அதிக பாதிப்பினையும் கொண்டிருந்த இத்தாலியில், கோடைவிடுமுறையின் பின்னதாக ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டில் திறக்கப்படும் பள்ளிகளின் நடைமுறைகளில் பாரிய வித்தியாசங்கள் இருக்குமென்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை, கோடைகால விடுமுறைகளின் பின்னதாகவும், குளிர்கால ஆரம்பத்தில் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படும் நிலையில், ஐரோப்பாவில் தற்போது பரவாலக வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மருத்துவத்துறை அதிகரிகள் இது அலட்சியமான விடயம் அல்ல என தொடரந்து எச்சரித்து வருகின்றனர். ஆயினும் எந்த நிலையிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் இத்தாலிய கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளின் பட்டியலை வெளியிட்டது. இத்தாலியின் கல்வி அமைச்சர் லூசியா அஸ்ஸோலினா இந்தத் திட்டத்தினை வெளியிடுகையில், "மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால நோக்கில் கல்வியை மேம்படுத்துவதற்கும் இத் திட்டம் உதவும் " என உறுதியளித்தார்.

ஆனால் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் தொடங்குவது குறித்து குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டிருக்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் இந்தத் திட்டம் நிச்சயமாக முழுமையான பதிலளிக்காது என கருதப்படும் நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக சில விடயங்களை தெளிவுபடுத்தும் மேலதிக அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளிவந்துள்ள அறிவிப்புக்களின்படி, குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டிய தேசியப் பொது விதி எதுவும் இல்லை. ஆனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது மற்றும் தனியார் இலவச, தன்னார்வ கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மாணவர்களது ஆரோக்கியம் தொடர்பில், அவர்களது ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், குழந்தைகளின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்தால் அல்லது சுவாச நோயின் அறிகுறிகளைக் காட்டினால் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறும் பேற்றோரை அரசு கேட்கின்றது.

இதேவேளை பள்ளியில் ஒரு மாணவர் அல்லது பணியாளர் உறுப்பினர், வைரஸ் தொற்றுக்காக நேர்மறையாக சோதனை செய்தால், அவ்வாறான நிலையில் குறித்த அப்பள்ளிக்கு மட்டும் ஒரு தற்காலிக மூடல் இருக்கலாம். ஆனால் பள்ளி மீண்டும் திறக்கப்படும். ஆயினும், ஒரு சோதனையில் நேர்மறை காணப்பட்டால், பள்ளியில் உள்ள அனைவரும் சோதிக்கப்பட வேண்டியிருக்கும் என துணை சுகாதார அமைச்சர் பியர்போலோ சிலேரிசெய்திச் சேவை ஒன்றுக்கு அளித்துள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகளின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தனியான ஒரு அறை இருக்க வேண்டும். அங்கு தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படலாம். ஆனால் பள்ளியை மூடலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தலைமை ஆசிரியரிடம் இல்லை. மாறாக அந்த முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளூர் அதிகாரிகளுக்கானது.

இணையத்தின் வழி தொலைதூர கற்பித்தல் மூலம் பள்ளிகள் நடத்தி வரும் பாடங்களை, பாடசாலை வகுப்புக்களுக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. தொலைதூர கற்பித்தல் பெரும்பாலும் பழைய மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருப்பினும், அவர்கள் பாடசாலை வளாகத்தில் முழு நாட்களையும் கழிப்பதைக் குறைத்தாலும், அனைத்து மாணவர்களையும் குறிப்பாக இளையவர்களை முடிந்தவரை பள்ளிகளின் வகுப்பறையில் திரும்ப அழைப்பதன் முக்கியத்துவத்தை, அரசு பள்ளிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் முகமூடி அணிய வேண்டுமா? என்ற பெற்றோர்களின் சந்தேகத்திற்கு, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நர்சரி அல்லது பாலர் பள்ளியில் முகமூடி அணிய வேண்டியதில்லை, என்பதை அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வயகூடிய மாணவர்களுக்கு முகமூடி அவசியம்தானா என்பதை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சுகாதார நிபுணர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளி வளாகத்துக்குள் ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் முகமூடி அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும்.

வகுப்பறைகள் சமூக ரீதியாக தொலைவு பேணப்படுமா எனில், பள்ளி வளாகம் முழுவதும் மாணவர்களிடையே குறைந்தது ஒரு மீட்டர் (சுமார் 3 அடி) தூரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு நெறிமுறை வலியுறுத்துகிறது.ஒவ்வொரு பள்ளியிலும் தங்களது வகுப்பறைகளை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பாகிறது.

மானவர்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் கருத்திற்கொண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஒரு மாணவர் அமரும் மேசைகளுக்கு அரசாங்கம் ஒரு டெண்டரை வெளியிட்டிருந்தாலும், பள்ளிகள் இன்னும் மேசைகளின் வருகைக்காக காத்திருக்கின்றன. இதில் சில பள்ளிககளுக்கான மேசை விநியோகங்களை உடனடியாக கிடைக்காது போகலாம்.

இடைவெளிகளை பேணுவதற்காக வெளிப்புற கற்பித்தல் வகுப்புக்களை பள்ளிகள் திறக்க விரும்பின், உள்ளூர் அதிகாரிகள் அல்லது உரிமையாளர்கள் பாதுகாப்பானவர்கள் என்று சான்றளிக்கும் இடங்களில் மட்டுமே, வளாகத்திலிருந்து படிப்பினைகளை வழங்க அனுமதிக்கப்படும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் கூடுதல் இடத்தை வாடகைக்கு எடுக்க பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அஸ்ஸோலினா கூறியுள்ளார்.

எவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டு, நடைமுறைகள் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், செப்டெம்பரில் பள்ளிகள் தொடங்கும் போது, வைரஸ் தொற்றின் தாக்கம், பரம்பல் என்பவையே, பள்ளிகளின் செயற்பாட்டினை, மாணவர்களின் வருகையினைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்பதே உண்மையாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.