எமதுபார்வை

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்கும் அதியுச்ச நடைமுறையாக கருதப்படுவது, சட்ட வரைவாக்கத்திற்கான மக்கள் வாக்களிப்பு.

சுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி சிக்கலான ஒரு சட்ட வரைவாக்கத்தினை செய்யும் பொருட்டோ, அல்லது கூட்டாட்சி உருவாக்கிய சட்டவரைபொன்றின் மீதான கேள்வியை, மறு வரைவு ஒன்றினை செய்வதற்கான மக்கள் அதிகாரத்தை வழங்குவதாக அமையும் இந்த வாக்கெடுப்பின் மூலம் பல்வேறு சிக்கலான விடயங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக கடந்தகாலங்களில் மாற்றியமைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க மக்கள் வாக்களிப்பில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து மிதமான குடியேற்ற வரம்பு முயற்சி, தந்தைவழி விடுப்பு, புதிய போர் விமானங்கள் கொள்வனவு, குழந்தைகளுக்கான வரி விலக்கு, வேட்டையாடும் சட்டம், என்பன இன்று மக்கள் வாக்களிப்பினைக் கோரியுள்ள ஐந்து விடயங்களாகும். இவை ஒவ்வொன்றும் தனித் தனியான முக்கியத்துவம் மிக்க விடயங்களாகும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து குடியேறுவதை தடை செய்யலாமா வேண்டாமா என்ற கோரிக்கை வெற்றி பெறுமா ? எனும் கேள்வி அதி முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. சுவிஸ் அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி) ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வுக்கு தடை கோரிப்பிரச்சாரம் செய்துள்ளது. வெளிநாட்டவர் தொடர்பில் கடுமையான எதிர்ப்பினைக் கொண்டுள்ள முதலாளித்துவ சிந்தனை மிக்க அக் கட்சி, வெளிநாட்டவர் தொடர்பில் கடும் போக்கான கருத்துக்களை முன் வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றது.

‘மிதமான குடியேற்ற வரம்பு முயற்சி’ வெற்றிபெறுமாயின், சுவிற்சர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். ஆயினும் இந்த வாக்கெடுப்பில் அது தோற்கடிக்கப்படும் என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைக்கான ஆதரவு சுவிஸ் மக்களில் எஸ்விபி கட்சியின் தளத்திற்கு அப்பால் செல்வாக்குச் செலுத்தவில்லை. அதனால் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (65 சதவீதம்) மக்கள் இந்த திட்டத்தை நிராகரிப்பவர்களாகவும், 33 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தைவழி விடுப்பு என்பதான சுவிஸ் சட்டத்தின் கீழ் தாய்மார்கள் 15 ஆண்டுகளாக மகப்பேறு விடுப்பு செலுத்தியிருந்தாலும், சுவிஸ் தந்தையர்கள் தற்போது தங்கள் குழந்தை பிறந்தவுடன் ஒரு நாள் விடுமுறைக்கு மட்டுமே உரிமை உண்டு.

இது சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான ஐரோப்பிய அண்டை நாடுகளை விட கணிசமாகக் குறைவு. நாடு முழுவதும் கூட்டாட்சி ரீதியாக அனைத்து உயிரியல் தந்தையர்களுக்கும் இதை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க திட்டம் உள்ளது. இந்த திட்டம் இரண்டு வார காலத்திற்கு இழந்த வருவாயில் 80 சதவீதத்தை உள்ளடக்கும் இந்த யோசனை வெற்றி பெறும் எனக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பில் நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்க ஜெட் விமானங்கள் அவசியம் என்று சுவிஸ் அரசாங்கம் கூறுகிறது. ஆயினும் எந்த வகையான ஜெட் விமானங்களை வாங்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, மாறாக இராணுவ வரவு செலவுத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட தொகையை விரிவுபடுத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கேட்டுள்ளனர்.

இதேபோன்ற கேள்வி 2014 ல் 'க்ரிபன்' போர் விமானங்களை வாங்குவது தோடர்பில் கேட்கப்பட்ட போது, சுவிஸ் பொதுமக்களில் 55 சதவீத வாக்காளர்கள் அதனை எதிர்த்து, நிராகரித்தனர். இம்முறை நேரடியாக விமானக் கொள்ளவனவு என்றில்லாது, இராணுவச் செலவினங்களுக்கான அதிகரிப்பாகவும், அதனூடு விமானக் கொள்வனவு எனும் செயல்முறையை அரசு அறிவித்திருப்பதால் அது வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஜனநாயகவாதிகளின் (எஸ்.பி.) முன்முயற்சியில் வரும் இந்த வாக்கெடுப்பு சமீபத்தில் சுவிஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை வரி விலக்குகளை எதிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் வரும் வரிகழிவுகள் மிகவும் செல்வந்தர்களுக்கு மட்டுமே நன்மையளிக்கும் என்பது அக்கட்சியின் கூற்று. இது பெரும்பாலும் தோல்விபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டை, நடைமுறை தீர்வு அல்லது ஓநாய் கொல்லும் சட்டம் குறித்து பெரும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. பெரும்பாலும் இந்தச் சட்டத்தில் மாற்றம் தேவையில்லை என மக்கள் வாக்களிக்கலாம் எனினும், அதனை உறுதியாகக் கணிப்புக்கள் தெரிவிக்கவில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.