எமதுபார்வை

ஜல்லிக்கட்டினை மீட்டெடுப்பதற்காக தமிழகம் பூராவும் இளைஞர்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இரவு பகல் பாராமல், உணவு தூக்கம் மறந்து தமது பாரம்பரிய அடையாளத்தையும் உரிமையையும் மீட்பதற்காக தன்முனைப்புப் பெற்றிருக்கின்றார்கள். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் புறந்தள்ளப்பட்டு இளைஞர்கள் தலைமையேற்றிருக்கும் போராட்டத்துக்கு பின்னால் பொதுமக்கள் அணி திரண்டிருக்கின்றார்கள். 

2015 டிசம்பரில் ஏற்பட்ட சென்னை- கடலூர் வெள்ள அனர்த்தத்தை கடப்பதற்கான தமிழக இளைஞர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்பதிலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இளைஞர்களே அதிகமாகவே ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் காட்டிய மெத்தனத்தையெல்லாம் கடந்து பெருமளவு இழப்புக்கள் தடுக்கப்படுவதற்கு இளைஞர்களின் தன்முனைப்பு அப்போது உதவியது.

இப்போதும், இளைஞர்களே தன்முனைப்புப் பெற்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்டுப் போராட்டங்களை தலைமையேற்றிருக்கின்றார்கள். இந்தப் போராட்டங்கள், மத்திய, மாநில அரசுகளை மாத்திரமல்ல அரசியல் கட்சிகள், தலைவர்கள், முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களை பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. எப்போதுமே, பொது நலனுக்காக தன்முனைப்புப் பெறும் இளைஞர் போராட்டங்களை அரச இயந்திரமும், வாக்கு அரசியல் தளமும் அச்சத்தோடே பார்த்து வந்திருக்கின்றன. இன்றைய தமிழகத்தின் நிலையும் அதுதான்.

தமிழகத்தில் கடந்த காலத்தில் வேறு பிரச்சினைகளே எழவில்லையா, அப்போதெல்லாம் வீதிக்கு இறங்காத இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் திடீர் என்று என்ன அக்கறை?, என்கிற கேள்விகளை சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கேட்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

எல்லாப் பிரச்சினைகளுக்காகவும் உடனடியாக வீதிக்கு இறங்க முடியாது. தொடர் பிரச்சினைகளின் அழுத்தம், ஒரு கட்டத்தில் கூட்டு மனநிலையாக ஒரு பிரச்சினையில் கிளர்ந்து எழும். அதன் ஒரு வடிவமாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களைக் கொள்ள முடியும். அது இயல்பானது. அது, ஏனைய பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்கள் காட்டிக் கொண்டிருக்கும் மெத்தனங்களுக்கான எச்சரிக்கை.

இன்னொருபுறம், தொடர் வஞ்சிப்புக்கு தமிழகம் ஆளாகி வருகின்றது. ஆனால், ஆளும் தரப்புக்கள் அதனை கடந்த காலத்தில் சரியாக கையாளாமல் மத்திய அரசிடம் ஏதோவொரு வகையில் சரணாகதி அரசியல் செய்கின்றன என்கிற பெரும் கோபம் தமிழக மக்களிடம் உண்டு. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படாமை அதில் முக்கியமான விடயம்.

தமிழகப் பிரச்சினைகளில் மத்திய அரசும், தேசிய ஊடகங்களும் தமக்கு சம்பந்தமில்லாதவை என்கிற அணுகுமுறையின் போக்கில் கையாள்வதும் இளைஞர்களின் பெரும் கோபத்துக்கு காரணமாகும். அவையெல்லாம் சேர்ந்து இப்போது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெடித்துக் கிளம்பியிருக்கின்றது.. ஆனால், அந்த நியாயமான கோபத்தைக் கூட தேசிய ஊடகங்கள் வேண்டாவெறுப்பாகக் கையாள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த இடத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுப் போராட்டங்கள் இன்னும் பெரும் முனைப்புப் பெற்று, நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரை அவை தொடர் போராட்டங்களாக நீள வேண்டும். அதுவே, தமிழகத்தின் மீதான ஓரவஞ்சனையைக் கடக்க உதவுவதுடன், பொதுப் பிரச்சினைகளில் உண்மையான முடிவினை, நீதியினை எதிர்காலத்திலும் பெற்றுக் கொள்ள உதவும். ஜல்லிக்கட்டு ஆதரவு- உரிமை மீட்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் மத்திரமல்ல, தேசிய அளவிலும் முக்கியத்துவம் நிறைந்தவையே.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.