எமதுபார்வை

வடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி கோரும் போராட்டம். அத்தோடு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு- கிழக்கிலும், வெளியிலும் பரவலான கவனயீர்ப்புப் போராட்டங்களும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மக்கள், விமானப்படையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களின் காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 31ஆம் திகதி திடீரென போராட்டத்தில் குதித்தனர். விமானப்படை முகாமுக்கு முன்னால் தகரத்தினால் ஆன கொட்டகை ஒன்றை அமைத்துக் கொண்டு அமர்ந்தவர்கள், இன்று வியாழக்கிழமை 24வது நாளாக தங்களின் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தினால் எழும் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. ஆனால், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தினை எந்தக் காரணம் கொண்டும் கைவிடப்போவதில்லை என்று மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் ஆயிரக்கணக்கான வாக்குறுதிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்று இரண்டினைத் தவிர நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்று எதுவும் இல்லை. அவை, நாட்கள், மாதங்கள், வருடங்கள் தாண்டி வாக்குறுதிகளாக மட்டுமே நீண்டு வருகின்றன. அந்த நிலையில், வாக்குறுதிகளை வழங்கி தங்களை மயக்க முடியாது என்பதில் தமிழ் மக்கள் இன்றைக்கு ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். தொடர்ச்சியாக போராடி வந்திருக்கின்ற சமூகம் என்கிற ரீதியில், மீண்டும் அறவழிப் போராட்டங்களின் பக்கத்தில் தம்மை மூர்க்கமாக இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கேப்பாபுலவில் ஆரம்பித்த காணி மீட்புப் போராட்டம், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளி்ட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு போராட்டங்கள் 3 வாரங்களைத் தாண்டித் தொடர்கின்றன. பரவிப்பாஞ்சான் போராட்டம் ஒரு வாரத்தினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

சொந்தக் காணிகளிலிருந்து போரினால் அகற்றப்பட்ட மக்கள், தகரக் கொட்டகைகளிலும், ஓலைக் குடிசைகளிலும் ஒதுக்குப்புறமாக வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் நிலத்தில் இராணுவம் உள்ளிட்ட அரச படை பெரும் கட்டிடங்களை அமைத்துக் கொண்டு தங்கியிருக்கின்றது. குற்றவுணர்ச்சி ஏதுமின்றி இராணுவக் கட்டடைப்பினை வடக்கு- கிழக்கில் ஆழமாக வைத்துக் கொண்டிருப்பதில் இலங்கை அரசு எந்தவித விட்டுக் கொடுப்பினையும் செய்யவும் தயாராக இல்லை. சில இடங்களிலிருந்து விலகிக் கொண்டாலும், இன்னமும் ஆயிரக்காணக்கான மக்களின் சொந்த நிலங்களை அரச படைகள் ஆக்கிரமித்துக் கொண்டு, அவர்களின் வாழ்தலுக்கான உரிமையை, தொழில் உரிமையைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. காணியின் சொந்தக்காரர்கள் கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருக்க, அவர்களின் காணியில் அரச படைகள் விவசாயம் செய்கின்றது. அதில் கிடைக்கும் நெல்லையும், காய்கறிகளையும் அந்த மக்களிடமே விற்பனையும் செய்கின்றது. தொழில் வாய்ப்புக்களை முடக்கி அதன்மேல் ஏறி நின்று எக்காளமிடுகின்றது.

அப்படியான நிலையில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தளராத தழுப்பாத உறுதியான போராட்டம், தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது. அது, அகிம்சை வழியிலான தொடர் போராட்டங்களை நோக்கி மக்களை பலமாகக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உந்து சக்தியையும் வழங்கியிருக்கின்றது. அது, உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையை பலமாக வைத்துக் கொள்வதற்கும் அவசியமானது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.