எமதுபார்வை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துவிட்டதாக மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன் அண்மையில் அறிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பில் மத்திய உள்துறைச் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் எழுதியிருக்கின்றார். 

சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரினையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தில் அவர்களின் நடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 14 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு வந்த சம்பவங்கள் இந்திய நீதித்துறை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. அதனை முன்னிறுத்தியே, குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஏழு பேரின் விடுதலை விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியத் தேசியக் கட்சிகளும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்திருக்கின்றன. மு.கருணாநிதி தலைமையிலான திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்திருந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அப்போது அதனை எதிர்த்த மு.கருணாநிதி, தற்போது அவர்களின் விடுதலை ஆதரிக்கின்றார். அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசோடு இணைந்து கூட்டாட்சி நடத்திக் கொண்டிருந்தது திமுக. ஏழு பேரின் விடுதலையை சாத்தியமாக்கினால், தன்னுடைய ஆட்சிக்கு காங்கிரஸினால் பாதிப்பு ஏற்படும் என்றே அப்போது மு.கருணாநிதி மறுத்திருந்தார்.

அதன் பின்னரான காலத்தில் ஈழமும் - அதன் இறுதிப் போராட்டக் கணங்களும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலித்து திமுக, 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்தது. அதற்கு சிலகாலத்துக்கு முன்னர் காங்கிரஸூடனான கூட்டணியை முறித்துக் கொண்டிருந்தது.

இதன்பின்னர், 2014ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களைவைத் தேர்தல் காட்சிகள் அரங்கேறிய போது, ஏழு பேரின் விடுதலையை முன்வைத்து ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெருபெற்றி பெற்றது. குறிப்பாக, மாநிலங்களவைத் தேர்தலுக்கு சில காலத்துக்கு முன்னர், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை தமிழக அரசு விடுவிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அதற்கான பதிலை மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் அறிவிக்காவிடில், உடனடியாக ஏழு பேரவையும் விடுதலை செய்யப் போவதாக அப்போது தமிழக அரசு அறிவித்தது.

இந்த விடயத்தினை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதன்பின்னர், தமிழக அரசுக்கு ஏழு பேரவையும் விடுதலை செய்யும் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அத்தோடு, அந்த விடயத்தினை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. மாநிலங்களவைத் தேர்தலும் முடிந்து போனது. ஏழு பேரின் விடுதலை விடயம் தமிழக மக்களின் மனங்களை வெல்வதற்கு பெரும் காரணமாக இருந்தது. அதில், அதிமுக சில காய்களை நகர்த்தி வெற்றி கொண்டிருந்தது.  தற்போதும் அப்படியானதொரு முனைப்புக்களின் போக்கிலான அறிவித்தலையாக, ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு விடுத்திருக்கின்றது என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.

இன்னும் இரு மாதங்களில் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான அதிருப்திகள் எழுந்திருக்கின்றன. ஊடகங்களும், அதிமுக மீது கூடியளவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், ஏழு பேரின் விடுதலை விடயத்தினூடு மீண்டும் தமிழக மக்களை வெற்றி கொள்ளலாம் என்று கணக்கும் போட்டிருக்கின்றதாக அதிமுக என்கிற எண்ணப்பாடு எழும். அது, இயல்பானது.

ஏழு பேரின் விடுதலை விடயம், வாக்கு அரசியல் தளத்திலிருந்து அகற்றப்பட்டு உண்மையான அக்கறையுள்ளவர்களின் கைகளுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான், நீண்டகாலமாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்களுக்கான நீதி கிடைக்கும். அது, விரைவில் சாத்தியமாக வேண்டும். மனிதம் காக்கப்பட வேண்டும்!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.