எமதுபார்வை

பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற சுதந்திர தின பிரதான நிகழ்வுகளில் இரு மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்களத்திலும், இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தின் போது இரு மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா தன்னுடைய ஆளுகையை தான் ஒருங்கிணைந்த இலங்கையிலிருந்து (சிலோன்) விடுவித்துக் கொள்வது தொடர்பிலான தீர்மானத்தின் பின்னர் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினருக்கும், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினருக்குமான அதிகாரப் பங்கீடுகள் தொடர்பிலான பிணக்கு ஆரம்பித்து விட்டது. அன்று ஆரம்பித்த பிணக்கு 68 ஆண்டுகளைத் தாண்டி பல்வேறு பரிமாணங்களோடு நீடித்து வளர்ந்து வந்திருக்கின்றது.

பிரித்தானியர்கள் ஒருங்கிணைக்கும் வரையில், இலங்கை ஒரு போதும் ஒற்றையாட்டியின் கீழ் இருந்ததில்லை. அது, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட பிராந்திய கோலொச்சுகைகளுடன் அரசர்களினால் ஆட்சி செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் இலங்கை தன்னை ஒரு நாடாக முன்னிறுத்தியதே அன்றி ஒரு தேசமாக முன்னிறுத்தவில்லை. அதற்கு வடக்கு- கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் உடன்பட்டதும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்கிற கோசத்தின் பின்னாலுள்ள பெரும் சிக்கல் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போராட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். ஆனால், சுதந்திரத்துக்கு அண்மித்த இலங்கை பௌத்த சிங்கள தேசியவாதத்தின் முற்றுமுழுதான பிடிக்குள் சிக்கிக் கொண்ட போது; மற்றைய தேசியங்கள் தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான முனைப்புக்குள் கவனம் செலுத்தின. அதுதான், தமிழர் தாயகத்தின் தமிழ்த் தேசிய உரிமை கோரல்களாகும்.

இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தின் போது தெற்கில் சிங்கக் கொடிகள் பறந்து கொண்டிருந்த போது, வடக்கு- கிழக்கில் கறுப்புக் கொடிகள் பறந்து கொண்டிருந்த வரலாற்றை மறந்து விட முடியாது. அன்றிலிருந்து, இலங்கையின் சுதந்திர தினத்தோடு தமிழ் மக்கள் மனதார ஒன்றித்த கணங்கள் வெகுவாகக் குறைவு. அதற்கான சாத்தியப்பாடுகளை தென்னிலங்கை ஏற்படுத்தவுமில்லை. அதனை, பௌத்த சிங்கள தேசியவாதம் அனுமதிக்கவும் இல்லை.

அப்படிப்பட்ட நிலையில், இரு மொழியிலான தேசிய கீதம் இசைப்பு நல்லிணக்கத்தையோ, நம்பிக்கையையே பெருமளவு விதைத்து விடாது. அது, ‘ஒரே நாடு  ஒரே தேசம்’ என்கிற நிலைப்பாட்டினைக் கழைத்து ‘ஒரே நாடு இரு தேசங்கள் (முஸ்லிம் மக்களின் விருப்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்)’ என்கிற நிலை உருவாகும் வரையில் உண்மையான சுதந்திர தினத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டாட முடியாது. அது, அவர்களுக்கு கறுப்பு தினங்களின் நீட்சிதான்!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.