எமதுபார்வை

“…மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை…” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை (யூலை 11, 2017) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். 

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமையாக சி.வி.விக்னேஸ்வரன் கடந்த நாட்களில் பல தரப்புக்களினாலும் முன்னிலைப்படுத்தப்பட்டவர். அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை ஏற்க வேண்டும். இல்லையென்றால், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்து, புதிய அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகளும், அழைப்புக்களும் விடுக்கப்பட்டன. குறிப்பாக, அவருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த தருணத்தில், அவரை புதிய தலைமையாக நிறுத்துவதற்கான அதியுச்சப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து மற்றும் சில சமரச முயற்சிகளோடு விடயங்கள் முடிவுக்கு வந்தன. அத்தோடு, அவர், மாகாண முதலமைச்சர் பதவியோடு தங்கிவிட்டார். ‘தமிழ்த் தேசியத்தின் தலைமையேற்க வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தவர்களை விட்டு அவர், சம்பந்தனின் கடிதங்களுக்குப் பணிந்தும் போனார். அந்தப் பணிவின் அடுத்த கட்டத்தைத்தான் அவர் நேற்று வெளிப்படுத்தியுமிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது இரா.சம்பந்தனுக்குப் பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க நினைக்கும் தரப்புக்கள் அனைத்துமே தூர நோக்கற்று, அவசரப்பட்டு முடிவுகளுக்கு வருகின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் மாற்றுத் தலைமையாக முன்னிறுத்தி தோற்றுப்போய் ஓய்ந்த தரப்புக்கள், இப்போது சி.வி.விக்னேஸ்வரனை அந்த இடத்தில் கொண்டு வர நினைக்கின்றன. ஆனால், அவரோ இவர்களோடு தொட்டுந்தொடாமலும் இருக்கவே விரும்புகின்றார். குறிப்பாக, தனக்கு பிரச்சினையொன்று வரும் போது, இந்தத் தரப்புக்களைப் பயன்படுத்திவிட்டு ஒதுங்கிவிட்டார்.

இது, இன்று நேற்று உருவான நிலை அல்ல. ஆனாலும், அவரின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலேயே மாற்றுத் தலைமைக்கான கோசத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் தரப்புக்கள் இன்னமும் இருக்கின்றன. ஏனெனில், இந்தத் தரப்புக்களினால், மாற்றுத் தலைமைக்கான அடித்தளத்தையோ, திட்டமிடலையோ, மக்களுடனான நம்பிக்கையான உரையாடலையோ செய்ய முடியவில்லை. மாறாக, ஊடக பத்திகளிலும், சமூக ஊடக பரப்புரைகளிலும் மட்டுமே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியலின் அஞ்சலோட்டக் கோல் (Race Baton) சி.வி.விக்னேஸ்வரனிடம் இருப்பதாக இன்னமும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பத்தியாளர்களும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், யதார்த்தம் என்னவென்றால், அந்த அஞ்சலோட்டக் கோல் இன்னமும் மக்களிடம் தான் இருக்கின்றது. அதனைப் பெற்றுக் கொண்டு ஓடுவதற்கு தற்துணிவும் திராணியுமுள்ள ஒருவர் இன்னமும் கிடைக்கவில்லை. அல்லது அடையாளப்படுத்தப்படவில்லை. அவ்வாறான நிலையில், சுய முடிவுகளையே எடுக்க முடியாத ஒருவரின் கைகளில் அந்த அஞ்சலோட்டக் கோலைத் திணிப்பதை நிறுத்த வேண்டும். அதுதான், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நல்லது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.