ஐரோப்பாவில் குளிர் விலகியது. இரவும் இருளும் குறைந்து பகலும் வெளிச்சமும் நீளத் தொடங்கிவிட்டது. மரங்கள் துளிர்விடவும், அரும்புகள் மலரவும் வேனிற்காலம் ஆரம்பமாகிவிட்டது. கொண்டாட்டம் நிறைந்த பண்டிகைக் காலத்தில்மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள் என்பதில் அரசுகளும், அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது கோரோனா கோவிட் - 19 என்னும் நுன் உயிரி.
எமதுபார்வை
கோவிட்- 19 கோரோனா வைரஸ் தாக்கமும் ஐரோப்பிய அச்ச மனநிலையும்.
இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தல் 2019: எதிர்கால நம்பிக்கைகளுக்காக தமிழ் மக்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்!
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலை போராட்டத்தின் புதிய களமாகக் கொண்டு மீண்டெழுவோம்!
முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது.
கோட்டாவின் வெற்றி: தென் இலங்கையின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பேரச்சம்!
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.
இம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
More Articles ...
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.
சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.