தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், 2. தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், 3. போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுமே இந்தக் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எமதுபார்வை
நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சிக்கா...?
இறுதி மோதல்களின் போது இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். இராணுவத்திலிருந்து தன்னுடைய சேவைக்காலம் நிறைவுற்று சென்ற மறுநாளே குறித்த நூலினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த நிகழ்வில் வெளியிட்டார்.
ஈழத்தமிழர்கள் மீதான இயக்குனர் சேரனின் வசை உணர்த்துவது எதனை?!
“ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் மாத்திரம் 18,000 திருட்டு விசிடி கடைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இணையத்தில் படம் பார்ப்பவர்கள், தரையிறக்கங்களின் கணக்கு தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள்!
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையும் முன்னாள் போராளியொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். குறிப்பிடும்படியாக, இதுவரை 108 முன்னாள் போராளிகள் உயிரிழந்திருக்கின்றார்கள்.
பான் கீ மூனின் விஜயமும் ஏமாற்றமும்!
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். அவரின் வருகை நிகழ்த்தியிருக்கின்ற விடயங்களை சற்று உற்று நோக்கினால், அவை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெருமளவு நற்சான்றிதழ்களை வழங்கும் போக்கில் அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நம்பிக்கையை கட்டியெழுப்புமா?!
காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எழுத்தாளர் ஜெயமோகனை ஈழத்தமிழர்கள் எட்டிக் கடக்க வேண்டும்!
“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது…..” ‘தடம்’ இதழுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி இப்படி நீள்கின்றது.
More Articles ...
இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.