'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'
எமதுபார்வை
இத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்று எப்போது முடியும்...?
உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
அவதானமாக இருப்போம் ...!
இந்த உலகின் மோசமான விலங்கினம் மனிதனாகத்தான் இருக்க முடியும் என்பதனை இத்தனை அழிவுகளின் பின்னாலும் நிரூபித்து வருகிறது மனிதகுலம் என எண்ணத் தோன்றுகின்றது. இந்த உவமைக்குத் தேசம், மொழி, இனம், எனும் பாகுபாடுகள் ஏதும் இருப்பதாக கூடத் தெரியவில்லை.
பதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....
உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.
ஐரோப்பாவில் என்ன நடக்கிறது..?
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.
வைரஸுடன் வாழப் பழகுதல்....!
" லைவ் ஒப் பீ " ஒரு சிறந்த திரைப்படம். கடல் விபத்தொன்றில் சிக்கும் கதாநாயகன் உயிர்பிழைத்துக் கொள்வதற்காகத் தொற்றிக் கொள்ளும் படகில் மறைந்திருக்கும் கொடிய புலியுடன் வாழப் பழகிக் கொள்வதுதான் கதையின் மூலம். ஏறக்குறைய அதுபோன்றதான வாழ்க்கையாகத்தான் சமகால மனிதவாழ்வு அமைந்து வருகிறது.
More Articles ...
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.
சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.