இலங்கை
Typography

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்