பதிவுகள்
Typography

 

கட்டுக் கட்டாக இராணுவ ஆட்டிலெரிகள் வீழ்ந்து வெடித்ததில், தனது மகனையும், கணவனையும் இழந்து விதவையானவர் சிவலிங்கம் மகேஸ்வரி. இறுதி யுத்த ஷெல் தாக்குதலில் தனது ஒரு கையையும் இழந்துவிட்டார். இலங்கையில் ஆயுத மோதல்களில் விதவையான 90,000 பேர் தமது வாழ்வாதாரத்திற்கும், தமது பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவு தேடவே கடும் பாடுபட்டு வருகின்றனர்.

 இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க விதவையானவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அதிலும் குறிப்பாக இராணுவ வீரர்களை கணவர்களாக கொண்டு யுத்தத்தில் பறிகொடுத்து தற்போது தெற்கில் வாழும் சிங்கள விதவைப் பெண்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கும் சலுகைகளுடன் ஒப்பிடுகையில் வடக்கில் வாழும் விதவைப் பெண்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கும் சலுகைகள் மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

பிரபல அல்ஜசீரா தொலைக் காட்சியின் 101 East நிகழ்ச்சித் தொகுப்பில் இந்த வாரம் அலசப்பட்டிருப்பது இலங்கையின் விதவைகளைப் பற்றியது. சுமார் 25 நிமிடம் கொண்ட இவ்வீடியோத் தொகுப்பு ஆங்கிலத்தில் உள்ளது. 2009 இல் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த போதும், இன்னமும் முடிவுக்கு வராத பல்வேறு வாழ்வாதார சிக்கல்களில் முதன்மையானது விதவைகளின் அவல நிலை என்பதை மிகத் தெளிவாக காண்பிக்கிறது இவ்வீடியோ பதிவு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்