பதிவுகள்

2009ம் ஆண்டு மே மாதம் வன்னிச் சமரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது. தொலைக்காட்சிகளிலும் பிரபாகரனின் உடல் என காயம்பட்ட உடலைக் காட்டினார்கள். ஆனால் இவை எதுவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையான அறிவித்தல்களாக இடம்பிடிக்கவில்லை.

காலம் காலமாக இந்திய இலங்கை அரசுகள் பிரபாகரன் குறித்துப் பரப்பும் பொய்யுரையாகவே கணிக்கப்பட்டது. சமரின் இறுதிக் கணங்களில் பிரபாகரன் தப்பிவிட்டார். முன்னைய பலபொழுதுகள் போலவே தலைமறைவு வாழ்க்கையில் அவர் உள்ளதாகப் பலரும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கை பொய்யானது என வாதிட்டோர் 2009 காரத்திகை 27ல் மாவீரர் தின உரையை பிரபாகரன் ஆற்றுவாராயின் அவர் உயிரோடிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றனர். இந்த எதிர்பார்ப்பு இலங்கை இந்தியப் புலனாய்வுத்துறையினரிடமும் இருந்தது என்பது மற்றுமொரு முரண் எதிர்பார்பு. ஆனால் அது பிறிதொரு உள்நோக்கம் கொண்டது. ஆனால் 2009, 2010, 2011,என கடந்த மூன்று மாவீரர் தினங்களிலும் பிரபாகரனின் மாவீரர் தின புதிய உரைகள் எதுவும் வெளியாகவில்லை.

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடு அவர்களது      வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

இவ்வாறு உரை எதுவும் வெளியாகவில்லையே தவிர, பிரபாகரன் உயிரோடுள்ளார், உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்பதான கருத்துக்கள் தொடர்ச்சியாக மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மதிமுக செயலயார் வை.கோ, நெடுமாறன் போன்ற தமிழகத்தின் தலைவர்கள் முதல், புலம் பெயர் தேசத்து விடுதலைப் புலிகளின் அமைப்பினைச் சேர்ந்த பலரும் இக் கருத்தினை வலியுறுத்தியே வருகின்றனர். இது விடயம் தொடர்பில் அவர்கள் எவ்வித மறுப்புக்களையோ மாற்றுக் கருத்துக்களையோ ஏற்பதற்குத் தயாராக இல்லை.

ஒரு தடவை புலம் பெயர் தேசத்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரோடு இது தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்த போது, உரையாடலின் இறுதியில் ' இந்தியாவிற்கு வாறியளா.. அண்ணைய நேரில காட்டுறம்... 'என உறுதியாகச் சொல்லி உரையாடலை முடித்திருந்தார். அவரது உரையாடலில் தெரிந்த உறுதி, நம்பிக்கை, என்பவை தாண்டிப் பேச முடியாத நிலையில், அந்தக் கணங்களில் மௌனமாகிப் போனோம்.

தமிழகத்தின் தலைப்புச் செய்தி : " முன்னே டாஸ்மாக்கும் பின்னே.."

அந்த உறுதிக்கும் நம்பிக்கைக்கும் சற்றும் குறைவில்லாத நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் காணப்பட்டார்கள். அவ்வாறான இளைஞர்கள் ஒன்றிணைந்து முக்கிய தெருக்களில் வைத்திருந்த தமிழர் திருநாள், பொங்கல் வாழ்த்துப் பதாகைகளிலேயே இலக்கு வைத்த துப்பாக்கியும், சிரித்த முகமுமாகப் பிரபாகரன் உயரத் தெரிந்தார். தமிழ்த் தேசியத்தின் மீது மாறாத பற்று வைத்திருக்கும் இந்த மண்ணின் மைந்தர்களிடம், பிரபாகரன் இல்லை என யாரும் சொல்லிவிட முடியாது. அது வை.கோவாக இருந்தாலும் சரி, நெடுமாறனாக இருந்தாலும் சரி.

தமிழ்த் தேசியத்தின் உயிரோட்டமாகப் பிரபாகரனைத் தங்கள் நெஞ்சில் சுமந்து வரும் அந்த மக்கள், தமிழக அரசியல்வாதிகள் எவரையும் தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகக் கருதவில்லை என்பதும், அதனால்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் யாவரும், பிரபாகரன் படத்தினையும், பெயரினையும், தேவைப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையும், அப்பட்டமாக வெளிப்பட்டுப் போகின்றது.

தமிழகத்தின் அரசியற்களத்தில், முன்னாள் முதல்வர் ஏம். ஜி.ராமச்சந்திரன் எவ்வாறு தவிர்க்கப்பட முடியாவராக இன்றளவும் காணப்படுகின்றாரோ அதுபோலவே தமிழ்த் தேசிய அரசியிலில் பிரபாகரன் பெயர் தொக்கியிருப்பது மறுக்கமுடியாதது. இது தொடர்பில் இக் கட்டுரையின் பிறிதொரு பகுதியில் மேலும் சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதனால் இந்தளவில் நிறுத்தி அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

வைரஸுடன் வாழப் பழகுதல்....!

தமிழகத்தின் நகரம், கிராமம், என எங்கெங்கு காணினும் கண்களை அடைத்து நிற்பது, கட்சித் தலைவர்களின் கட்அவுட் விளம்பரங்கள். இப்போது டிஜிடல் தொழில் நுட்பத்தில் தயாராகும் இந்த விளம்பரப் பதாகைகள் தயாரிக்கும் தொழிலுக்கு நல்லவாய்ப்பு உண்டென எண்ணுமளவுக்கு நிறைந்து காணப்படுகிறது இந்த விளம்பரங்கள்.

இவ்வாறான விளம்பரப் பாதாகைகள் வைப்பவர்கள் கூடவே ஒரு சோலார் சூரிய ஒளி மின்பிறப்பாக்கி தகட்டினையும் பொருத்த வேண்டும் என ஒரு சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்தாலே, தமிழகத்தின் மின்பற்றாக்குறை இல்லாது போய்விடும் என எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்திலும், கேரளத்திலும், 'பளிச்' எனத் தெரிநித்த சில மாற்றங்களில் முக்கியமானவை, கேரளத்தில் பிச்சை எடுப்பவர்களைக் காணவில்லை, தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் தொகை குறைந்திருப்பது போல் தெரிகிறது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் வசதிகள் உருவாகி வருகின்ற போதும், இன்னமும் சில சாலைகள் அதே குண்டும் குழியுமாகத்தான் காணப்படுகின்றன. அது போன்றே அரச போக்குவரத்துறை வளர்ச்சியும், மாற்றமும் காண, இன்னும் நூற்றாண்டுகள் செல்ல வேண்டும் போல் தெரிகிறது.

இந்த நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், போருக்குப் பின்னைய சிறிலங்காவில் துரித மாற்றங்கள் தெரிகிறது. ஆனால்...

(இன்னும் வரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்


வாழும் பிரபாகரன் ! : பகுதி 1

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.