பதிவுகள்

ஒரு காலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராகக் காணப்பட்ட சரத்பொன்சேகா சிறைக் கைதியாகி சிறப்பிழந்து போயுள்ளமையும், நாட்டின் தலைவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஊடகவியலாளர் லசந்த சுட்டுக் கொல்லப்பட்டமையையும், சிறிலங்காவில் நிலைகொண்டிருக்கும் ஆட்சியதிகார பீடத் தன்மை சுட்டும் சாட்சியங்கள்.

ஆட்சிக்கு ஆதரவாகவோ அல்லது மெளனமாகவோ செயற்படும் யாருக்கும் ஏதும் பங்கமில்லை. அத்தகையோருக்கு சங்கடங்கள் ஏதுமில்லை. அவ்வாறானவர்களது தனிப்பட்ட வாழ்விலும், பர்வையிலும், நாடு முன்னேறுகிறது. விரைந்து எழும் புதிய கட்டிடங்களும், விரைவு வேக வீதிகளும் நாட்டின், முன்னேற்றம் எனச் சொல்கின்றார்கள்.

இவை அனைத்தும் வெளிநாடுகள் விரும்பிக் கொடுக்கும் நன்கொடைகளில் எழுந்தவையே தவிர, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முளைத்தவை என்பது புரிவதில்லை அவர்களுக்கு. சராசரி மனிதர்களின் நாளாந்த வாழ்க்கையில் ஆயிரம் ரூபா அற்பத் தொகையாகத் தெரியும் வகையில் பொருளாதாரம் போய்கொண்டிருக்கிறது. வணிகத்துறை சார்ந்த சிங்கள நண்பர் ஒருவர் பேசுகையில் நாடு வேகமாகப் பணவீக்கத்துக்குள் வீழ்கிறது எனக் கவலைப்பட்டார். ஆனால் யாராலும் எதுவும் சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது.

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடு அவர்களது      வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

நாட்டிற்குப் பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கும் அனைத்து வளங்களும் குறைந்திருப்பதால், தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு அதீத அக்கறை கொள்கிறது. புதிய சுற்றுலா மையங்களை உருவாக்குவதிலும், அவற்றுக்கான விளம்பரங்களை மேற்கொள்வதிலும் கவனம் கொள்கிறது. அந்த வகையிலான நோக்கில் முன்னேற்றமும் கண்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் தெரிகிறது.

சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து வடபகுதி செல்ல இப்போது எந்தவித தடைகளும் இல்லை. ஒரிரு இடங்களில் காணப்படும் வீதிச் சோதனைகளும் ஒரு நடைமுறைக்கு என்பது போலவே காணப்படுகின்றன. இரவு நேரச் சொகுசு பேரூந்துகள், தலைநகர் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கின்றன. முன்னிரவில் கொழும்பிலிருந்து புறப்படும் பேரூந்துகள் அதிகாலையில் யாழ்ப்பாணம் சென்றடைகின்றன. இது தவிர புகையிரத சேவையும் வவுனியாவரை செல்கிறது. ஆக போர்க்காலத்தில் பெரும் சிரமமும் அச்சமும் நிறைந்ததாக இருந்த வடபகுதிப் பயணங்கள் இப்போது சாதாரணமாகிவிட்டன. அதனால் பயணிப்பவர் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது.

அரசின் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம், திட்டங்களின் பேரில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அற்றினால் அரசின் மீது மக்களுக்கு பேரபிமானம் ஏதும் வந்திருப்பதாகவும் சொல்ல முடியாது. மூன்று தலைமுறைகளாக சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகளால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்ட மக்கள், இந்தத் திட்டங்களையும் புண்ணுக்கு புணுகு தடவும் முயற்சியாகவே பார்க்கின்றார்கள். ஆக தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணமாகிப் போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதை முறையாக முயற்சிக்காத எந்தவொரு அரசியற் தலைவரையும் பத்தோடு பதினொன்று என்று எண்ணியே பாரத்துப் பழகுகின்றார்கள்.

இந்த நோக்கில் தமிழ் தலைவர்களையும் அவர்கள் விலக்கிப் பார்பதாகவில்லை. அரசுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனும் விநாயக மூர்த்தி, பிள்ளையான் எனும் சந்திரகாந்தன், என எல்லோரையும் ஒரே பார்வையிலேயே நோக்குகின்றார்கள். அரசுடன் சேர்ந்தியங்கும் போதும், இவர்களால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது என்கிறார்கள். ஆயினும் இப்போதைக்கு இவர்கள்தான் தலைவர்கள் என்பதில் மாற்றம் இன்றியும் இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் போல் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. ஆனாலும் இலங்கை அரசியலைச் சூழ்ந்திருக்கும் சர்வதேச அரசியல் வியூகங்கள் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வலுவான நிலையில் இருக்கின்றதா என்பது கேள்விக்குரியதே. சந்தர்ப்பவாத அரசியலுக்குள் இதன் உறுப்பினர்கள் பலரும் சிக்கியிருப்பதாகவே அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருஞ் சமுத்திரத்தில் தனித்துப் பயணிக்கும் பாய் மரப்படகைப் போலுள்ளது என்றார். இதற்கான ஆதரவுத் தளம் இப்போதைக்கு இந்தியத் தரப்பிலிருந்து மட்டுமே கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அதுவும் அல்லாடுகின்றது என்றவர், தமிழகத்திலுள்ள தமிழுணர்வாளர்கள் மீது சற்றுக் காட்டமான கருத்தொன்றினையும் முன் வைத்தார்.

சினிமா நடிகை, அசின், அமீர்கான், மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்கள் வந்த போதும், சீறிக் குரலெழுப்பி எதிர்புத் தெரிவித்த தமிழுணர்வாளர்கள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்த போது மட்டும் ஆர்பரித்து எழவில்லையே. ஏன்..?

(இன்னும் வரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்


வாழும் பிரபாகரன் ! : பகுதி 1 : பகுதி 2 : பகுதி3

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.