பதிவுகள்

அந்த ஊடகவியலாளரின் கருத்து ஏற்புடையதாகவே முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் போது தெரிந்தது.தலைநகரில் அவரது உரை நிகழ்ந்த போது நேரில் போக விரும்பிய போதும் நமது பயண நிரலின் இறுக்கம் இடம்தரவில்லை.

ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்த இளைஞர் ஒருவரைப் பின் சந்தித்து உரையாடிய வேளை அது பற்றிக் கேட்ட போது, கலாமின் உரை அவரிடத்தில் பெரிய தாக்கமெதனையும் எற்படுத்தி இருப்பதாகத் தோன்றவில்லை.

உண்மை நிலையும் அதுபோலவே தெரிகிறது. நல்லெண்ண முயற்சிகள் என அரசு மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் கூட்டம் திரள்கிறது. அல்லது திரட்டப்படுகிறது. அது தெற்கிலோ வடக்கிலோ எதுவாக இருப்பினும் அதில் கூடுகின்ற மக்கள் ஏதோ வேடிக்கைக்காகக் கூடுவது போலவே சென்று வருகின்றார்கள். அந்த வகையில் அப்துல் கலாமின் நிகழ்வும் உரையும், ஒரு மாலைநேரத்தில் காலிமுகத்திடல் சென்றது போலவே பல இளைஞர்களுக்கு அமைந்திருக்கக் கூடும். ஆனால் அரசு தரப்பில் அது மிகப் பெறுமதியானது. சர்வதேச அங்கீகாரங்களுக்கான மற்றுமொரு நகர்வு.

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடு அவர்களது      வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

தமிழகத்தின் தமிழுணர்வாளர்களது போராட்டங்களுக்குள் மறைந்து போகும் மற்றுமொரு விடயம் குறித்து மற்றுமொரு நண்பர் சொன்ன விடயம் ஆச்சரியத் தருவதாகவிருந்தது. தமிழக மீனவர்கள் படுகொலை, தாக்குதல் என்பவை குறித்து தமிக அரசும் மத்திய அரசும் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அவர்கள் அது குறித்த அக்கறையின்றிச் செயற்படுகையில் தமிழுணர்வாளர்களின் போராட்டங்களை தமக்கான கவசங்களா வைத்துக் கொண்டு, தமிழகத்தின் பெரு முதலாளிகள் சிலர், அதிக லாபம் குறித்த நோக்குடன் றோலர் படகுகள் மூலம் கடல்வளங்களையும், சிறு கடற்தொழிலாளர்களின் தொழில் வளங்களையும் வாரி அழித்து வருகின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவர்கள், சிறுபடகுகளில் தொழில் செய்யும் இலங்கைத் தமிழ மீனவர்களும், தமிழகத்தின் சிறுபடகு மீனவர்களுமே என்றார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் குறித்து ஆக்கபூர்வமான அரச நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், தாக்குதலும் தொடர்கிறது, இவ்வாறான கடற்கொள்ளையும் தொடர்கிறது எனக் கவலைப்பட்டார். கரையோரக் காவல்துறைப் படகுகளை நடுக்கடலில் நிறுத்துவதன் மூலம் தாக்குதல் நடைபெறுவதைத் தடுக்க முயற்சிக்காது இருப்பதற்குக் காரணம், இந்த றோலர்படகு முதலாளிகளாக இருக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் அதிகாரபலமோ எனச் சந்தேகமும் தெரிவித்தார்.

யுத்தத்தின் முடிவில் அநாதரவான பல இலட்சம் மக்களை முகாம்களுக்குள் உள்வாங்கிக் கொண்ட வவுனியா புதிய நகராகப் பொலிவு பெற்று வருகிறது. பொருளாதார வசதிகள் படைத்தவர்களும், தொழில்வாய்புக்கள் உள்ளோரும் இந் நகரத்தினை நிறைத்து வருகின்றார்கள். அதுபோலவே அரசு துறைசார்ந்த செயலகங்கள், பல்கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் என்பன புதிதாக உருவாகின்றன. ஏற்கனவே இருந்தவை இன்னமும் விரிவாகின்றன. முன்னரிலும் பார்க்க சன நெரிசல் மிகுந்ததாக உள்ளது இந்த எல்லைக்கிராமம்.

வன்னியில் மக்கள் மீள் குடியேற்றப்படுகின்றார்கள் என அறிக்கைகள் சொல்லுகின்ற வேகத்து, எதுவும் அங்கு நடப்பதாகத் தெரியவில்லை. மக்கள் தங்கள் வாழ்விடங்கள் பலவற்றுக்கும் திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை மீள் குடியேற்றம் என வர்ணித்துக்கொண்டால் அந்த அறிக்கைகள் சொல்வது சரியெனக் கொள்ளலாம். மற்றும்படி அநேக மக்கள் இன்னமும் முறையான வாழ்விடங்களையோ, வாழ்வாதாரங்களையோ பெற்றுக் கொள்ளவில்லை எனபதுவே உண்மை.

ஆனாலும் உழைக்கும் மக்களான அந்த மக்கள் தங்கள் இழப்புக்கள் சோகங்களின் மத்தியில் இயன்றளவு மீண்டுவரத் தொடங்கியிருக்கின்றார்கள். என்றும் பொய்துப் போகாத வளம் மிக்க அந்த மண்ணில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு தொடங்குகனிறார்கள். கிடைத்த சில பொருட்களில் தங்குவதற்கு சிறு குடில், உணவுக்கான சிறு தோட்டம், அவற்றை உருவாக்குவதில் என்றும் குறையாத தங்கள் உழைப்பு என மீளவும் ஒன்றிலிருந்து உயரத் தொடங்குகின்றார்கள்.

வன்னியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கின்றன. எங்கெங்கும் இராணுவம் என்ற வகையில் எல்லாத் திசைகளிலும் இராணுவம் நிறைத்திருக்கிறது. அரச செயல் மையங்கள், இராணுவ கட்டளை பீடங்கள் என்பன வன்னியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகின்றன. இது அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என வெளிப்படையாகத் தெரிகின்ற போதும் உள்நோக்கம் நிறைந்தது என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

இத்தகைய செயல் மையங்களும், அவற்றைச் சூழ உருவாக்கப்படும் புதிய குடியிருப்புக்களும், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களையும் குடியமர்த்தும் நுட்பம் நிறைந்தது என்கிறார்கள் அவதானிகள். இதனை யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது. ஏனெனில் இது குடியேற்றத் திட்டம் என்ற வகைக்குள் வராது. ஆக ஒற்றைநாடு என்ற கட்டமைப்புக்குள் எல்லா மக்களையும் ஒன்றாகப் பார்க்கும் நோக்கில் இது பரப்புரை செய்யப்படும். சர்வதேச ரீதியில் இதனை யாரும் எதிர்க்கவும் மாட்டார்கள் . காலப் போக்கில் பிரிவினைவாதம் என்பது எழமுடியாதவாறான செயல் நோக்கு இதன் உள்ளார்ந்த அரசியற் சூட்சுமம் என்கிறார்கள்.

ஆனால் இந்தச் சூட்சுமங்கள் எதுவும் புரியாதவர்களாகவோ அல்லது புரிந்தும் புரியாதவர்களாகள் போலவோ, பற்றற்ற ஞானிகள் நிலையில் தங்கள் அன்றாட வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறார்கள் அங்கு வாழும் மக்கள்...

(இன்னும் வரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்


வாழும் பிரபாகரன் ! : பகுதி 1 : பகுதி 2 : பகுதி3 : பகுதி4

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.