பதிவுகள்
Typography

வலைப்பதிவுகளை, தனிநபர் தினக்குறிப்புக்கள் எனச் சொல்லலாம் என்றொரு கருத்துண்டு. புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.

நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக என்கின்ற குறிப்புக்களுடன் வலைப்பதிவு செய்யும் வலைப்பதிவர் ஹேமாவின் கூற்றுக்களை உறுதி செய்யும் வகையில் அமைகிறது அவரது 'உப்புமடம் சந்தி' வலைப்பதிவு.

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைநோக்கிச் செல்லும் பிரதானசாலைக்கு, கே.கே.எஸ்,வீதி என்றழைக்கப்படும் பெருமிதமும் உண்டு.அந்த வீதியில் பயணிக்கையில், கோண்டாவில் என்கின்ற இடத்தில் அமைந்திருக்கும் சந்தியின் பெயர் உப்புமடம் சந்தி. இந்தப் பெயரில் வலைப்பதிவு செய்யும் ஹேமா தன் பதிவுக்ள பலவற்றிலும், ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறார்.

தாய் மண்ணின் மீதான தவிப்பு, புலம்பெயர் வாழ்வினூடான அனுபவங்கள் எனப் பல்வேறு விடயங்களைப் கதைகளாப் பேசுகிறது உப்புமடம் சந்தி. கதைபேச வாங்கோ என அழைக்கும் உப்புமடம் சந்திக்கு  இவ்வழியால் வாருங்கள்.

வலைப்பதிவர் கவனத்துக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்