பதிவுகள்
Typography

வருடத்தின் 365 நாட்களும் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிற இடம் என்றால் அது பாலஸ்தீனமாகத்தான் இருக்கும். குறிப்பாக கடந்த மார்ச் 10 ம் தேதி இஸ்ரேலிய போர் விமானங்கள்

காசாவின் பல்வேறு பகுதிளில் ஏவுகனைத்தாக்குதல் நடத்தின இதில் 10 பலியாகினர், 1964ம் ஆண்டு இஸ்ரேலின் நிலஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கைடைபிடிக்கப்படும் பாலஸ்தீனர்களின் பூமிதினமான மார்ச் 30 ஆன்று கூட, இஸ்ரேல் அதை சீர்குலைக்கும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகவல் சமீபத்திய தகவல் மட்டுமே. தினந்தோறும் பாலஸ்தீனத்தை அனைத்து பக்கங்களிலும் முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் முடக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சூழலில் கடந்த 2010 டிசம்பரில் புதுடெல்லியிலிருந்து தரை வழியாக 10,000 கிமீ பயணமாக பாலஸ்தீனம் சென்று, அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கச் சென்ற ஆசிய பயணக்குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ண்.

எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் மதுரையை சேர்ந்தவர், தமிழ்ச்சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சூழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். தன் எழுத்துக்களுக்காகத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் பயணித்தும் வருபவர்.

இந்தியாவின் குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர். மிக அபூர்வமான பல தகவல்களைப் பார்வைகளைத் தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தொடர்ந்து உயிர்மை, தலித் முரசு என பல இதழ்களில் எழுதியும் வருபவர், தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார்.

குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலாடாதே, தோழர்களுடன் ஒரு பயணம் இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரை தொகுதிகள். சமீபத்தில் கூடங்குளம், முல்லைபெரியாறு குறித்தும் தனது பதிவுகளை படைப்புகளாக பதிவுகளாக பதிவுசெய்திருப்வர்.

கடந்த 2010 ல் சென்றது போலவே இந்த ஆண்டும் அதே குழுவினருடன் ஜெருசலேம் செல்கிறார். கடந்த மார்ச் இறுதிவாரத்தில் புறப்பட்ட முத்துகிருஷணன்,ஜோர்டான் தலைநகரம் அம்மான் சென்று,அங்கிருந்து ஜெருசலேம் செல்கிறார். அவரது பயணத்திற்கு முன்பாக 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக தனது பயணம் குறித்து அளித்த பிரத்யேகமான சிறு  நேர்காணல் இது.- 4Tamilmedia Team

2010ல் சென்று வந்த பாலஸ்தீன பயணம் குறித்து..?

பாலஸ்தீனப் பயணம் முழுவதும் சாலை வழியாக சென்றாதால் பல கலாச்சாரங்களுடன் கை குலுக்கிச் செல்வது மிகவும் புதிய அனுபவத்தை தந்தது. ஒவ்வோரு நாளும் புதிய நிலப்பரப்பு, புதிய மக்கள், புதிய மொழி என நான் இதுவரை புத்தகங்களில், புகைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமே பார்த்த படித்த விடயங்களை நேரில் அனுபவித்தது வியப்பான அனுபவமாக இருந்தது. பலவித முகங்கள், பாவனைகள், நிறங்கள், உடைகள், மொழிகள், உணவுகள் என இந்த பயணம் மனிதகுல நாகரீங்கள் தோன்றிய நிலங்களின் ஊடே பயணித்தது, எங்கள் அனைவருக்குமே பிரமிப்பை தந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்கள் படும் துயரங்களை பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத காட்சிகளாக என்னுள் உறைந்தது.

தற்போதைய பயணத்திற்கும், 2010 பயணத்திற்கும் என்ன வேறுபாடு?

இந்த முறை அதே குழுவினருடன் பாலஸ்தீனத்தின் மறுமுனையான மேற்கு கரை நோக்கி செல்கிறேன். ஜோர்தன் நலைநகரம் அம்மாணில் இருந்து உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கூடி ஒரு மாபெரும் பேரணியாக ஜெருசலம் நோக்கி செல்லவிருக்கிறோம். மார்ச் 30 ஆம் தேதி நாங்கள் அம்மாணில் சங்கமிக்கிறோம்.

தற்போதைய பயணத்தில் சந்திக்க இருக்கும் முக்கியஸ்தர்கள் யார் யார்?

இந்த முறை இங்கிலாந்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் விவா பாலஸ்தீனா நிறுவியவருமான ஜார்ஜ் காலவே, கவிஞர் இபராகிம் நசருல்லா, ஆர்ச் பிஷப் தெஸ்மந்த டுடு, டாக்டர் கார்னல் வெஸ்ட், காதா காரீமி, லெயிலா காலித என பல உலக முக்கியஸ்தர்களை சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறேன்.

உங்கள் பயணங்கள் சாதித்தது என்ன?

இந்த பயணத்திற்கு பின் இந்தியாவெங்கும் சென்று எங்கள் அனுபவ பகிர்வுகளை நடத்தினேம், தமிழகத்திலும் பல ஊர்களின் இந்த அனுபவங்களை பகிரும் அரங்குகள் ஏற்பாடு செய்யபட்டன. உலகம் முழுவதும் மக்கள் மீது நடக்கும் அடக்குமுறைகள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்தனர். பொதுவாகவே பிரதிகளை படித்து அறிந்துகொள்வதை விட ஒருவர் நேரில் பார்த்து வந்து விவரிக்கும் போது அந்த அனுபவம் என்பது வேறாகவே இருக்கிறது. இன்னும் அதிகப்படியான மக்களிடம் இந்த செய்திகளை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே என் அவா.

அரபு நாடுகளில் பயணித்தவர் என்ற முறையில் ஈரான்,அமெரிக்கா இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர்சூழல் முன்றாம் உலகப்போராக மாறும் என்கிறார்கள் உங்கள் கருத்து என்ன?

மூன்றாம் உலக போராக அது மாற வாய்ப்பு இல்லை, ஈராணில் மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் அமெரிக்கா ஒருவித தொடர் பதற்றத்தை விதைத்த வண்ணம் உள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் தொடங்கி அவர்களது அடுத்து இலக்கு ஈராண் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஈராக் என்கிற ஒரு தேசத்தை அதன் நாகரீகத்தை சிதைத்த பின்னும் அவர்களால் இது வரை பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் தான் இப்பொழுதும் ஈராண் மீது ஒரு தாக்குதல் தொடுக்க தக்க காரனங்களை தேடி அலைகிறது அமெரிக்கா.

 அரபுநாடுகள் என்றாலே தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிற நாடுகள் என்ற கருத்து உண்மைதானா?

இந்த கருத்து அமெரிக்கா திட்டமிட்டு கடந்த 35 ஆண்டுகளாக உருவாக்கியதே, இது வளைகுடாவில் உள்ள எண்ணை வளங்களை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர அவர்கள் போட்டு ஒரு நெடுங்திட்டமே. அமெரிக்காதான் முதலில் ரஷியாவை எதிர்த்த தனது போரில் ஒசாமாவை தயார் செய்தது. ஒசாமாவுக்கு கணக்கு இல்லாத டாலர் பணம், ஆயுதங்கள் கொடுத்தது, ஒசாமா பின் லாடன் ஒரு நாட்டு பிரதமர் போல் அமெரிக்கா சென்று அரச மரியாதையுடன் அந்த நாட்டையே வலம் வந்தார். அதன் பின்னர் அவர்களின் கட்டுப்பாடை விட்டு ஒசாமா வெளியேறிய கனம் தான் அவர் தீவிரவாதியாக மாற்றப்பட்டார். இன்றும் அமெரிக்காவின் அடியாளாக இருந்து கொண்டு நீங்கள் எந்த அட்டூழியங்கள் செய்தாலும் அதற்கு கைமாறாக உலக வங்கி கடனும் சகல மரியாதைகளும் கிடைக்கும், அப்படி நீங்கள் செய்ய மறுத்தால் நீங்கள் ஒரு தீவிரவாத நாடாக கருதப்படுவீர்கள்.

4தமிழ்மீடியாவுக்காக: அ.தமிழ்ச்செல்வன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்