பதிவுகள்

புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் அழகு ஒப்பனை பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தானவை அல்ல என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்,

சிலவேளைகளில் அவற்றை பயன்படுத்தும் போது எவ்வாறான ஆபத்தான் விளைவுகள் ஏற்படுகின்றன என தெரிந்து கொள்ளவும் விலங்குகளில் முதலில் பரிசோதனை செய்து பார்க்கின்றன.

இதற்காக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் கொல்லப்படுகின்றன என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லண்டனில் ரீஜெண்ட் தெருவோரம், பொதுமக்கள் முன்னிலையில் 10 மணித்தியால நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அழகு ஒப்பனை பொருட்கள் பற்றிய இராசயன பரிசோதனையை மனிதர்களிடமே செய்யப்பட்டால் என்னவாகும், என ஒரு பெண்ணை வைத்து இக்காட்சிகளை சித்தரித்துள்ளனர்.  வாய்திறக்கப்பட்டு இரு பக்கவாட்டிலும் இழுத்து கொலுக்கி ஒன்றின் மூலம் இழுத்து கட்டப்பட்டும்,  வாய்கள் மூட முடியாத போது வலுக்கட்டாயமாக உணவு கொடுக்கப்பட்டும், கண்களில் இராயன கலவை ஊற்றப்பட்டும் தலைமுடி வளிக்கப்பட்டும், அனைத்து வகையான விலங்குகள் சோதனைகளையும் இந்த பெண்ணிடம் நிஜமாகவே மேற்கொண்டார் வைத்தியராக அவ்விடத்தில் தோன்றிய ஒருவர்.பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பலர் தங்களது கமெராக்களால் இக்காட்சிகளை படம்பிடித்துடன், ஏன் இப்படி செய்கிறார்கள் என காரணத்தை தேட தொடங்கினர். இவ்விழிப்புணர்வு போராட்டத்துக்கான பரிசோதனை காட்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைத்த பெண் ஆக்ஸ்போர்ட் புரூக் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 23 வயதான ஜாக்லின் எனும் மாணவியாவார்.


உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் லட்சக்கணக்கான விலங்குகள் நாள்தோறும் இவ்வாறு பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தபடுவதாகவும் இது எம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது என்பது தெரியாததாலேயே இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும் இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரான மனிதாபிமானத்திற்கான சர்வதேச சமூகம் மற்றும் லஷ் அழகு ஒப்பனை பொருட்களின் நிறுவன ஆகியன தெரிவித்துள்ளன. மேலும் அழகு ஒப்பனை பொருட்களுக்காக விலங்குகள் சோதனை என்ற ரீதியில் பலிக்காடாவது முற்றாக நிறுத்தப்படும் வரை தமது பிரச்சாரத்தை விரிவு படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.அழகு ஒப்பனை பொருட்களுக்காக விலங்குகள் பரிசோதனை செய்யப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் தடை செய்யப்பட்டது. எனினும் விலங்குகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட ஒப்பனை பொருட்களை வேறுநாடுகளுக்கு விற்பனை செய்வது லண்டனில் சட்டபூர்வமாக நடைபெற்றுவருகிறது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் கடந்த 2004ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான ஒப்பனை பொருட்கள் விற்பனை செய்யபடுவது தடை செய்யப்பட்டது. எனினும், அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து கொள்வனவு செய்து வருகின்றன.

மேலும் சில ஆசிரியர் தெரிவுகள்

  

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'