பதிவுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட்டால் தமிழனின் தொன்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்

சில தமிழின விரோதிகள் அந்த அறிக்கையை தடுத்து வைத்திருப்பதாகக் குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. அதை தமிழக அரசு அத் தடையை தகரத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் நாளிதழில் எழுதப்பட்டுள்ள குறிப்புக்களின் முக்கியத்துவம் கருதி, அந்த இதழுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team

ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை ! : தடையைத் தகர்க்குமா தமிழக அரசு ?

தூத்துக்குடி மாவட்டம் உருவானதன் வெள்ளி விழாவையொட்டி, "நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை வைத்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.

உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர்தான் உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம். இதை பல அறிஞர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது மொகஞ்சதாரோவிற்கு முந்தைய நாகரிகம் என வங்கதேச அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என்ற தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மாவட்ட மக்கள் இருக்கும் அதே சமயம், சில கோரிக்கைகளும் எழுந்துள்ளன!.

"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்ற நூலை எழுதிய பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு-விடம் பேசினோம்.

"நான் 2006-லிருந்து 2010௦-வரை நான்காண்டுகள் உழைப்புக்கு பின்னரே இந்த நூலை வெளியிட்டுள்ளேன். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வறிக்கை வெளியாகிவிடும், அதனையும் சேர்த்து நூல் வெளியிட வேண்டும் என்று காத்திருந்ததால்தான் நூல் வெளியீடு தாமதமானது. ஆனால் ஏழு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் இன்றுவரை அரசு அந்த ஆய்வறிக்கையை வெளியிடாதது வருத்தத்தை அளிக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே "அலெக்சாண்டர் இரியா" இங்கு ஆய்வு செய்த புகைப்படங்களை அனைத்தையும் வெளியிட்டுவிட்டார். ஏன் இன்னும் இந்தியா வெளியிடவில்லை?
மாவட்ட வெள்ளி விழாவை ஓட்டியாவது ஆதிச்சநல்லூர் ஆகல்வாராய்ச்சி ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும்.

இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது. அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு வரலாற்று ஆர்வலர்கள், பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும். வெளிநாட்டவர்கள் கூட இதனை பார்ப்பதற்கு வருவார்கள்.

மேலும் இப்பகுதியில் சிறு குழி கூட தோண்டக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடம் முழுவதையும் சுற்றி வேலி அமைப்பதால் இங்கு புதையல் இருக்கிறது என்ற புரளியில் அவ்வப்போது சிலர் குழி தோண்டுவது தடுக்கப்படும். ஆதிச்சநல்லூர் பகுதியில் ஒரு படித்துறை இருக்கிறது. இந்தப் படித்துறையை ஒட்டியே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. இங்கு அருங்காட்சியகம் அமைத்து சுற்றுலா தளம் அமைக்கும்போது ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கவேண்டும்" என்றார் காமராசு.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாறு துறை பேராசிரியர் மருத்துவர் தேவராஜிடம் பேசினோம்.

"ஆதிச்சநல்லூர் சிறப்பு பற்றி தூத்துக்குடி மக்களுக்கே பலருக்குத் தெரியாது. மாணவர்களிடமும் விழிப்புணர்வு கிடையாது. காரணம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய பாடம் மாணவர்களுக்குக் கிடையாது. கல்லூரியில் கூட பி.ஏ. மூன்றாம் ஆண்டில் ஒரு பேப்பர், எம்.ஏ இரண்டாம் ஆண்டில் ஒரு பேப்பர் மட்டுமே உள்ளது. எனவே மாணவர்கள் அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் "பீல்டு சைடு விசிட்" என்ற கல்லூரி பாடத்திட்டம் வேண்டும்.

இங்கு அமைக்கப்பட இருக்கும் மியூசியத்தில் இரும்பு, தங்கம், வெள்ளி, மண்பாண்டம் இவைகள் எல்லாம் எப்போது தோண்டி எடுக்கப்பட்டது என்றும், எந்த முறைகளில் தோண்டி எடுக்கப்பட்டது என்றும் தெளிவாக குறிப்பிடவேண்டும். அதேசமயம் இந்த அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி மாவட்டம் அல்லாது தமிழகம் முழுதும் ஏற்படுத்தவேண்டும். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மியூசியம் துவக்கப்பட்ட பிறகு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.

அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று நீண்டகாலமாக போராடிவந்த ஸ்ரீவைகுண்டம் பாரதி கலை இலக்கிய மன்றச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பாரதிமுருகனிடம் பேசினோம்.

"மொகஞ்சதாரோ, ஹரப்பா போல ஆதிச்சநல்லூரையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். ஆட்சியரின் அறிவிப்பு எங்கள் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மொத்தம் உள்ள நூற்று பதினான்கு ஏக்கர் பரப்பளவில் இதுவரை வெறும் பத்து சென்ட் இடத்தில் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. எனவே மீதியுள்ள இடத்திலும் அகல்வராய்ச்சி பணிகளைத் தொடங்கவேண்டும்.

இங்கிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருள்களை கொண்டுவந்து இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.

ஏழு ஆண்டுகளாக வெளியிடாமல் இருக்கும் ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கையை இந்திய அரசு வெளியிடவேண்டும். இந்த ஆய்வின் நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டால் அறிக்கை தயார் செய்து வருகிறோம் என்றே பதில் தருகின்றனர். இப்போதாவது அதை உடனடியாக வெளியிட வேண்டும்" என்றார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, தொகுதி எம்.எல்.ஏ, சுடலையாண்டி மற்றும் சத்தியபாமா ஆகியோர் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்டு...அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெள்ளி விழாவையொட்டி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார்.


நன்றி: தமிழக அரசியல்

 

இச்செய்திகளையும் பார்வையிடுங்கள்

 

இன்றைய டுவிட்டர் பிரசன்னா சினேகா #sneha , #prasanna

 

4தமிழ்மீடியாவின் இன்றைய சினிமா வெளியீடுகள் - 11 மே 2012

 

சந்தோஷ் சிவனைச் சந்தித்த போது!

 

'தி அவேஞ்சர்ஸ்' ஹாலிவுட் விமர்சனம் வருகின்றது பேஸ்புக் அப் சென்டர் 

 

எகிப்தின் கிசா பிரமிட்டுக்கள் 3D தொழிழ்நுட்பத்தில் ஆன்லைனில் காணும் வாய்ப்பு

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'