பதிவுகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்தபோதும் அவற்றில் குறைபாடுகளும் உள்ளன.

மதி ஓடை தளத்தில் வெளிவந்த பதிவொன்று இலங்கை தொலைத்தொடர்பு சேவைகளிடம் வாடிக்கையாளர்கள் பெற்ற அனுபவத்தை பகிர்வதாக உள்ளது. மீள் பிரசுரம் செய்ய அனுமதித்த சுதாவிற்கு நன்றி தெரிவித்து அப்பதிவு இங்கே. 4தமிழ்மீடியா குழுமம்

தொழில்நுட்பத்தில் உயரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் அதிகளவான ஆதிக்கத்தை செலுத்தி நிற்பது தொலைத்தொடர்பு தான். அந்தவகையில் தொலைபேசி வலையமைப்பு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

இந்திய வலையமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வலையமைப்புகளின் கட்டணங்கள் சற்றே அதிகம் தான். இதை அங்கே சென்ற போது தான் என்னால் உணர முடிந்தது ஏனென்றால் நண்பர் ஒருவரின் றீசார்ஜ் கடையின் புத்தகத்தை எடுத்துப்பார்த்ததால் 20 ரூபாயிற்கு மேல் றீசார்ஜ் போட்டதாகவே தெரியவில்லை.

ஆனால் இலங்கையை பொறுத்தவரை அப்படியில்லை வரி உள்ளடங்கலாக நிமிடத்திற்கான மிகக் குறைந்த கட்டணமே ரூபாய் 1.33 ஆகும். பெருமளவு இலாபத்தை பெற்றுக் கொள்ளும் வலையமைப்புகளும் தமக்குள்ளே மறைமுகமான பணப்பறிப்பை மேற்கொள்கின்றன.

முதலாவதாக டயலொக் வலையமைப்பின் மறைமுக பணப்பறிப்பை பற்றிப் பார்ப்போம். இங்கே அவர்களது நிபந்தனைகள் பற்றி கூறப்பட்டாலும் பல படித்தவர்களே இந்த விடயத்தில் ஏமாந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி முன்னரும் ஒரு தடவை நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இப்போதும் பலர் ஏமாந்திருக்கிறார்கள். டயலொக்கில் அழைப்பை மேற்கொள்பவர் தனது காத்திருப்பு நேரத்தில் கேட்பதற்காக ring tone என்ற பாடல் ஒலிபரப்பு சேவை இருக்கிறது. இதன் மாதாந்தக்கட்டடணம் 30 ரூபாவாகும் (வரி நீங்கலாக). அதே இடத்தில் பிற்கொடுப்பனவு சேவை என்றால் பாடலுக்கான சேவைக்கட்டணமாக மாதம் 50 ரூபா அறவிடப்படும். அதே இடத்தில் நீங்கள் ஒரு பாடலுக்கு மாறினால் பழைய பாடலுக்கான கட்டணமும் அறவிடப்படும்.

இது பலருக்கு தெரியாது. இருந்தாலும் மாதம் மாதம் ஒரு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது எனக் கூறப்பட்டாலும் இப்போதும் குறுந்தகவல் பார்க்காத பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆங்கில அறிவு உள்ள எத்தனை பேர் இருக்கிறார்கள்.

சரி இச்சேவையின் பாடல் ஒன்றை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் அதற்கான நிமிடக் கட்டணம் ரூபாய் 2.66 சதமாகும் ஆனால் அதை நிறுத்துவதற்கு அழைப்பெடுத்தால் 2 நிமிடங்கள் வரை அறிவுறுத்தலுக்காக காத்திருந்தாலும் இதைச் செய்வதற்கு 3, 4 தடவை முயற்சிக்க வேண்டும். அண்மையிலும் எனது உறவினர் ஒருவரது தொலைபேசியை வாங்கிப் பார்த்த போது 3 பாடல்கள் செயற்படுத்தப்பட்டபடி இருந்தது.
அவர்களது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு கேட்ட போது இவை நிறுவன விதி. நீங்கள் தான் அவதானமாயிருக்க வேண்டும் என்கிறார்கள்.

அடுத்து எயாரெல் வலையமைப்பில் நேற்று நண்பர் ஒருவருக்கு நடந்த அசம்பாவிதம் பற்றி ஒரு குறிப்பு.
எயரெல் பிற்கொடுப்பனவு சேவை இணைய இணைப்பு வைத்திருப்பவருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ம் திகதி கட்டண பட்டியல் அனுப்பப்படும். ஆனால் அவர்கள் 27 ம் திகதிக்கு முன்னர் கட்டணம் செலுத்தினால் போதுமாகும்.

ஆனால் நண்பர் தனது 4 ம் மாதத்திற்கான கட்டணத்தை கடந்த 8.5.2012 அன்று தான் பணம் செலுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள எயாரெல் அலுவலகத்திற்கு சென்ற போது இம்மாத தொகையை செலுத்தினாலே இணைப்புத் தரப்படும் என்கிறார்கள். ஆனால் அவருக்கு இம்மாத பணம் செலுத்த 27ம் திகதிவரை அவகாசம் உள்ளது. அத்துடன் இன்னும் அவருக்கு கட்டண பட்டியல் வந்து சேரவில்லை. அனால் அவர்களால் இணைப்புத் தர முடியாதாம்.
எப்படி இருக்கிறது.

பதிவின் மூலம் இங்கே

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'