பதிவுகள்

நேற்று பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டனர். 

பிரணாப் முகர்ஜிக்கு 59 % ஓட்டுக்கள் என்றும், சங்மாவிற்கு 29 % திலிருந்து 35 % வரை ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த போட்டி ஆரோக்கியமானதா?  முதல் குடிமக்னுக்கே இப்படிப் போட்டிபோட வேண்டியிருக்கிறதா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் ஆதினந்தன் லெமூரியா இப்படி கருத்து முன்வைக்கிறார்.
&
"நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு போட்டியிட உரிமை உண்டு. அதனால் ஜனநாயக முறைப்படிப் பார்த்தால், போட்டி போடலாம். அனால் அந்த போட்டி யாருக்குள் என்பதுதான் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. இங்கு பார்த்தால், குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் போட்டியிடுகிறார்கள். பிரணாப் முகர்ஜி அரசியலில் மூத்த தலைவர். பலவகையிலும் அனுபவசாலி. அவரை முன்மொழியவும், வழிமொழியவும் பலர் முன்வரும்போது, சங்மாவை அவர் சார்ந்த கட்சியே ஆதரிக்காமல், கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள்.

மேலும், பாஜக தங்கள் கட்சியிலேயே பிரணாப் முகர்ஜியை எதிர்க்க ஆளில்லை என்றபின், சங்மாவை ஆதரிக்க முன்வந்திருக்கிறது. இதைக்கூட புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள முடியாத சங்மா, எப்படிக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமாவார்? மேலும் இந்த பதவிக்கு தன குடியைக் காரணம் காட்டி வாக்குக் கேட்பதும் கூட பொருத்தம் இல்லாததாகவே இருக்கிறது.

மேற்கண்ட வகையில் பார்த்தாலும், இந்த போட்டி ஆரோக்கியமானதில்லை. மேலும் நமக்குள் ஒற்றுமையின்மை எப்போது, எதில் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் அண்டை நாட்டவர்களுக்கு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கூட இவர்களுக்குள் ஒற்றுமை இல்லையா என்று நினைத்தாலும் இந்த போட்டி ஆரோக்கியம் இல்லாததாகவே இருக்கிறது'.