பதிவுகள்
Typography

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம் Guor Marial எனும் ஒலிம்பிக் வீரரை பற்றியது.

எனினும் அவரை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கொஞ்சம் விபரமாக தேடி எழுதியுள்ளார் வலைப்பதிவாளர் அனுதினன் சுதந்திரநாதன். அவருடைய அனுமதியுடன் இப்பதிவை இங்கு மீள் பதிவிடுகிறோம்.  - 4தமிழ்மீடியா குழுமம்

நேற்றைய இரவு ட்விட்டர் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, பலரும் ட்விட் செய்த ஒரு விடயம் எனது கண்ணில்பட்டது! நம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதை கொஞ்சம் விபரமாக தேடி போடுகிறேன்! எங்குமே, எதிலுமே பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானது! அதை விரும்பாத மனிதர்களே இல்லை என்று குறிப்பிடலாம்! ஆனால், திறமைகளுக்கு முன்னாள் அந்த பிரதிநிதித்துவம் என்பது கூட முக்கியமானது இல்லை என்பதை உலகை ஒன்றிணைக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிருபித்து இருக்கிறது!


உலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற்றும் ஒவ்வரு வீரனதும் கனவு, தான் எப்படியாவது ஒரு ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற வேண்டும்! தந்து நாட்டுக்கும் ஒரு பதக்கம் பெற்றுதந்துவிட வேண்டும் என்பதுதான்! காரணம், என்னும் பல நாடுகள் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் ஒரு பதக்கம் கூட பெறாது பங்குபற்றி கொண்டிருக்கிறது! இந்த நிலையில், ஒரு வீரன் தன்னை எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்யாமல் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுகிறான் என்றால், ஆச்சரியமில்லையா?

ஆம்! ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இத்தகைய வீரர்களின் கதை நீண்ட வரலாற்றை கொண்டது! எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதபட்சத்தில் அவர்கள் ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள்! எல்லா வீரர்களுக்குமே, தன் தாய்நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பில் வருவதுதான் பெருமிதம்! ஆனால், இந்த நாடற்றவர்கள் கையில் ஒலிம்பிக்ஸ் கொடியை ஏந்திய வண்ணம் அணிவகுப்பில் கலந்து கொள்ளுவார்கள்!


இந்த வீரர்கள் வரிசையில் இந்த வருடம் இணைந்து கொண்டவர்தான் Guor Marial என்ற மரதன் ஓட்டவீரர்! 28 வயதாகும் இந்த வீரன் தென்சூடானை சேர்ந்தவர்! ஆனால், போரின்காரனாமாக, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வதிவிட உரிமையை பெற்று கொண்டாலும், குடியுரிமையை பெற்று கொள்ள முடியவில்லை! இதனால், சிறந்த மரதன் ஓட்ட வீரனாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ்ஸில் அமெரிக்கா சார்பாக பங்குகொள்ள முடியவில்லை! அது போல, தென்சூடான் நாட்டில் ஒலிம்பிக் குழு என்றவொன்று இல்லை! எனவே, அவர்கள் சார்பாகவும் பங்கு கொள்ளமுடியாத நிலை இந்த வீரனுக்கு! அந்த சமயத்தில் சூடான் நாடு தனது கொடியின் கீழ் அந்த Guor Marialஜ பங்கு கொள்ள அழைப்பு விடுத்த போதும், அவன் மறுத்து விட்டான்.

காரணம், அவனது எட்டு சகோதர்களை கொன்று அழித்ததே இந்த சூடான் அரசாங்கம்தான்! அதுபோல, அமெரிக்கா நாடும் அவனை கண்டுகொள்ளவில்லை! இதனால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுவதில் சந்தேக நிலை ஏற்பட்டது! இந்த நிலையை அறிந்த பல்லாயிரகணக்கான வெவேறு நாடுகளிலிருந்த அன்பர்கள் ஒலிம்பிக்ஸ் குழுவிடம் விடுத்த கோரிக்கையின் பயனாக, இந்த முறை Guor Marial ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்கு கொள்ள இருக்கிறான். ஆனால், இப்படி ஒரு வீரர் பங்குகொள்ளுவது இதேவே முதல் முறையில்லை.

இதற்கு முன்னதாக 1992ம் ஆண்டு பார்சிலோனாவில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வில் Federal Republic of Yugoslavia and the Republic of Macedonia நாடுகளின் வீரர்கள் கூட ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குகொண்டார்கள்! இவர்கள், மொத்தமாக 54 நிகழ்வுகளில் 58 போட்டியாளர்களாக பங்குபெற்றி, பதக்கங்களை பெற்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்!

பின்பு, ஒலிம்பிக்ஸ் போட்டியில் 2000ம் ஆண்டு சிட்னி போட்டிகளில் அன்றைய East Timor நாடுகளின் வீரர்கள் கூட தங்களிடம் ஒலிம்பிக் குழு இல்லாத காரணத்தினால்  இவ்வாறு பங்கு பெற்றினார்கள்!


அதுபோல, இந்த ஆண்டு, Guor Marialயுடன்  five islands of the Netherlands Antilles என்ற தீவுகளின் கூட்டமும் இவ்வாறு ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்குகொள்ளுகிறது! ஆனாலும், இவர்களுக்கு மத்தியிலும் Guor Marialக்கு ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த சந்தர்ப்பம் கிடைத்தமை ஒரு சிறிய நாடான தென்சூடான் நாட்டின் குரல் சர்வதேச சமூகத்தில் ஏற்று கொள்ளுபட்டதாகவே பலரும் கருதுகிறார்கள். காரணம், Guor Marial ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த முன்பு கூறியது இதுதான்,

 “ தென்சூடான் கொடியை நான் ஏந்தவில்லைதான். ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஓடுவேன்”.

1992க்கு பின், இவ்வாறு பங்குகொள்ளும் வீரர்கள் பதக்கங்களை பெற்றது இல்லை! இந்த முறை  Guor Marial மரதன் ஓட்ட போட்டிகளில் பதக்கம் ஒன்றை பெற்றுகொள்ளும் சமயத்தில் அது மிக பெரிய நிகழ்வாக அமையும்! அது மட்டுமல்ல, பராக் ஒபாமாவை அங்கீகரித்த அமெரிக்கா நாடும், இந்த திறமை கொண்ட வீரனை கண்டுகொள்ளவில்லை என்று நிச்சயமாக வருந்தும் என்பதும் உண்மைதான்!

என்னும், சிலகாலங்களில் நாங்கள் கூட இப்படியான கொடியின் கீழ் பங்குகொண்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை! இப்பொழுதுதானே, ஆரம்பித்து இருக்கிறோம் இல்லையா?

இப்பதிவின் மூலம் ஆடுகளம் இணைப்பு

BLOG COMMENTS POWERED BY DISQUS