பதிவுகள்

தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து கொண்டிருக்கிறது 'வேத கணிதம்' இணையத்தளம்.

இந்து சமயத்தின் நான்கு அடிப்படை வேதங்களுல் ஒன்றான அதர்வண வேதத்திலிருந்து உருவாக்கப்பட்ட வேத கணிதமானது, உலகின் வேகமான கணக்கீட்டு முறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்ப்பதற்கும், துல்லியமாகவும்,வேகமாகவும் விடை காண்பதற்கும் பெரிதும் உதவுகிறது வேத கணிதம். பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள், எண்களை எழுதுவதில் இடமதிப்பு திட்டத்தை அறிமுகபடுத்தியவர்கள் என இந்தியர்களுக்கு எப்படி கணிதத்தில் தனிப்பெருமை உண்டோ, அதே பெருமை வேத கணிதத்தின் கண்டுபிடிப்பாளர்கள் என்பதிலும் கிடைக்கிறது.

ஆனால் இன்றைய நவீன உலகில்,  வேத கணிதத்தின் அடிப்படை, முக்கியத்துவம், பயன்பாடு என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் பெருமளவில் குறைந்துவிட்டது.

இதனை கருத்திக் கொண்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வேத கணிதத்தை கொண்டு சென்று சேர்க்கும் வகையில் இந்த இணையத்தளம் தொழிற்பட்டு வருகிறது.

மேலும் தமிழ் மொழி தெரியாத மற்ற மொழி ஆர்வலர்களுக்கும், வேத கணிதம் பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மொழி பெயர்ப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது. முதுனிலை பட்டதாரியும், கணிப்பொறி வல்லுனருமான தே. அன்பழகன் இந்த இணையத்தளத்தை நிறுவியுள்ளார்.

கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், வேத கணிதத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இத்தளம் பயனுடையதாக இருக்கும் எனும் நம்பிக்கையில் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இத்தளம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளோம்.

வேத கணிதம் இணையத்தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரி : http://www.vedic-maths.in

இவற்றையும் காண்க :