பதிவுகள்

மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை, இந்திய வெகுஜன ஊடகங்கள் இன்னமும் எவ்வாறான நிலையில் உள்ளது என ஆராய்கிறது இந்த அரசியல் கட்டுரை.

கல்கி வார இதழுக்காக, கவிதா முரளிதரன் எழுதிய கட்டுரையை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கிறோம் - 4தமிழ்மீடியா குழுமம்

"எந்தத் துறையும் அதில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியின் பொருட்டு உயிரை விட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆயுதப்படையும் இலங்கையில் ஊடகத்துறையையும் தவிர.” தி சண்டே லீடர் பத்திரிக்கையில் கொல்லப்படுவதற்கு முன்பு அதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே எழுதிய தலையங்கத்தின் முதல் வரி.

லசந்த இறந்து 3 ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று இலங்கையில் ஊடகத்தின் நிலை போர் சமயத்தில் இருந்ததை விட படு மோசம். எதிர்ப்புணர்வை தொடர்ந்து பதிவு செய்து வந்த சண்டே லீடர் பத்திரிக்கையை ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் விலைக்கு வாங்கிவிட, லசந்தவை தொடர்ந்து அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வந்த பிரெட்ரிகா ஜான்ஸ் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. போருக்கு பிறகுதான் பல ஊடகவியலாளர்கள் உயிருக்கு பயந்து இலங்கையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். போருக்கு பிறகு ஊடகத்துறையில் அடக்குமுறை அதிகமாகியிருக்கிறது.

இலங்கையில் பாரம்பரியமான ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஒரு பக்கம் அதிகரிக்க, இன்னொரு பக்கம் வலைத்தளங்களில் மாற்று ஊடகத்திற்கான தேவை உணர்ந்து அதற்கான முயற்சிகளை அங்குள்ள ஊடகவியலாளர்கள் எடுத்து வருகிறார்கள். கிரவுண்ட்வியூஸ் போன்ற இணையதளங்கள் இலங்கையில் மாற்று ஊடகத்திற்கான தேவையை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றன.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், மாற்று ஊடகக் குரல்களை நசுக்கும் போக்கு கடந்த வருடத்தில் மிக அதிகமாக இருந்தது. ஒரு பாடகியை எதிர்த்து டிவிட்டரில் எழுதியதற்காக சிலர் கைது செய்யப்படுவது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மட்டுமே சாத்தியம். மும்பை மரியாதையால் அல்ல, பயத்தால் ஸ்தம்பித்திருக்கிறது என்கிற உண்மையை முகப்புத்தகத்தில் உரைத்ததற்காககவும், அதை வெறும் லைக் மட்டுமே செய்ததற்காகவும் இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்படுவதும் இங்கு மட்டுமே சாத்தியம்.

காந்தி வலியுறுத்திய அகிம்சை வழியிலான போராட்டத்தை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வரும் மக்கள் மீது தேச துரோக வழக்குகளை பாய்ச்சியிருக்கும் அதே அதிகார மையம் தான், வெறும் ஒரு கார்ட்டூன் வரைந்ததற்காகவும் அதே தேச துரோக வழக்கை பாய்ச்சியிருக்கிறது. கார்ட்டுனிலிருந்து போராட்டம் வரை தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயம் கொள்ளும் ஆட்சியாளர்கள் நமக்கு வாய்த்திருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.

இந்த வருடம் ஊடகத்துறையில் மிக மோசமான போக்காக நான் பார்ப்பது, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவான 66ஏவைதான். இந்த பிரிவின் அடிப்படையில்தான் இணையத்தில் நமது சுதந்திரம் என்று நம்பி நாம் வெளியிடும் கருத்துகள் கண்காணிக்கப்பட்டு அதன் தன்மைகளின் அடிப்படையில் கைது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுகிறது.

இந்த பிரிவின் கீழ்தான் மும்பையை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைதுகளுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்வினைகள் வர, சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறது அரசாங்கம். ஆனால் இந்த மாற்றங்களும் வெறும் கண் துடைப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கருத்து சுதந்திரத்தின் ஆன்மாவை நோக்கி அரசு நீட்டியிருக்கும் துப்பாக்கிதான் 66ஏ. ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால். இந்த சவாலை சாதாரண மக்களை விட ஊடகவியலாளர்கள் எதிர்கொள்வது மிக முக்கியம். ஏனெனில் தமது கருத்து சுதந்திரத்தை மட்டுமல்லாமல் எல்லோருக்குமான கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது ஊடகத்தின் கடமை. ஆனால் ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் என்று விளிக்கப்படும் ஊடகம்தான் இன்று அதன் விழுமியங்களை சில கோடிகளுக்காக காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறது.

வணிகமயமாகிவரும் வெகுஜன ஊடகங்கள் இருக்கும் காலகட்டத்தில் ஐந்தாவது தூணுக்கு உரிய கடமைகளை இணையம் போன்ற மாற்று ஊடகங்களே சரியாக செய்து வந்தன. ஆனால் வெகுஜன ஊடகங்களுக்கு இருக்கும் கட்டுபாடுகளைவிட இணையத்தளங்களுக்கு இன்று கட்டுப்பாடுகளும் அச்சுறுத்தல்களும் அதிகம். அது மறைமுகமாகவும் செயல்படுகிறது. மரபுரீதியான ஊடகத்தின் பின்புலமோ, அதிகார பலமோ வாய்க்கப்பெறாத இணைய ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வழிக்கு கொண்டுவருவது அதிகார மையங்களுக்கு மிக எளிது. இந்த நிலையை ஒரு நச்சு சுழல் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே நேரம், மரபு ரீதியான ஊடகங்களுக்கு அடக்குமுறைகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவதூறு வழக்குகள் தொடங்கி கேலிச் சித்திரத்துக்கு தேச துரோக வழக்கு வரை ஊடகவியலாளர்கள் சட்டரீதியாகவே பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

உலக அளவிலான ஊடக சுதந்திர அட்டவணையில் இந்தியாவிற்கு இந்த வருடம் 131 இடம் கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் 122வது இடத்திலிருந்து இந்த வருடம் 131க்கு இறங்கியிருப்பது, ஊடக சுதந்திரத்துக்கும் இந்தியாவில் இறங்கு முகம் என்பதையே சுட்டுகிறது.

தென்னாப்ரிக்கா, உக்ரேயின் போன்ற நாடுகளை விடவும் நாம் ஊடக சுதந்திரத்தில் மோசமகாக இருக்கிறோம் என்று சொல்கிறது வருடா வருடம் இந்த அட்டவனையை தயாரித்து வெளியிடும் எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் என்கிற அமைப்பு.

ஈழப் போர் தொடங்கி கூடங்குளம் போராட்டம் வரையில் தனது மோசமான பக்கங்களையே வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிசளித்த இந்திய வெகுஜன ஊடகத்தின் இருண்ட காலம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒரு ஊடகவியலாளராக நான் மிகவும் வெறுக்கும் உண்மை இது.

 

பதிவின் மூலம் : கல்கி
கட்டுரையாளர் : கவிதா முரளிதரன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.