இலங்கை
Typography

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலொன்று ஒலிக்க விடப்பட்டுள்ளது. 

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலே ஒலிக்க விடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் அந்த பாடல், சுதந்திரக் கட்சியின் நிகழ்வொன்றில் ஒலிக்கவிடப்பட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனி ஈழத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கின்றதா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்