ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்......'நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவற்றிலேயே  மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்.' என்று. அதன் பின் அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஐ.நா. மன்றில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. வெல்லக் கடினமான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பை வெற்றி கொண்டதற்காக வழங்கப்பட்ட பாராட்டுப்பத்திரம் அது.

Read more: பான் கீ மூனும் தமிழர்களும்! (நிலாந்தன்)

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார்.  முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார். 

Read more: பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான வடக்கு மாகாணம்; புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும்  தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது.  இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும்  வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.  

Read more: தத்தளித்து நிற்கும் வடக்கின் அபிவிருத்தியும், பொருளாதாரமும்! (சுப்பிரமணியம் சுதர்ஷன்)

'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் (வன்வலுவின் ஒரு வடிவம்) கோலோச்சிய அரங்கொன்றில், மென்வலு பற்றிய எண்ணக்கருவும், சொல்லாடலும் கவனம் பெறுவது சற்று வியப்பானதுதான். ஆரம்பத்திலிருந்து அந்த உரையாடல்களை சில தரப்புக்கள் ஒருவிதமான ஒவ்வாமையோடு எதிர்கொண்டன. ஆனாலும், மென்வலு பற்றிய உரையாடல்கள் தொடரப்பட வேண்டியதன் அவசியத்தை எம்.ஏ.சுமந்திரன் ஏற்படுத்தி விட்டிருக்கின்றார். 

Read more: மென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும்.  அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. 

Read more: விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவுனியாவிலும், இலண்டனிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இவ் நூலானது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது. 

Read more: சம்பந்தர் சிந்திப்பது சரியா?! (நிலாந்தன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பலதரப்புகளுக்குள் இருந்து ஒருவகையான கிளர்ச்சி மனநிலையோடு கூடிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கருத்துச் சொல்வதற்கும் போதனை செய்வதற்கும் மனித மனங்களில் அநேகமாவை பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றன. அப்படியானதொரு வாய்ப்பினைப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவமும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

Read more: புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்