பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலனுக்காக 17 அமைப்புகளை உலகம் பூராவும் உருவாக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சியினரால் அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியொன்று ஈழத் தமிழர்களிடத்தில் இவ்வாறு ஊடுருவியிருப்பதன் நோக்கம் உண்மையில் எவ்வகையானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

Read more: புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜெனீவாத் திருவிழாவின் இன்னொரு முக்கிய நாள் இன்று. அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். 

Read more: ஜெனீவாத் திருவிழாவும், காவடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஒரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல்வாதிகள் போகிறார்கள். செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள். ஊடகவியலாளர்கள் போகிறார்கள். என்.ஜி.ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சிலர் ஜெனீவாவிற்கு போய் வருகின்றார்கள். இதில் சிலர் ஜெனீவாவிற்கு போவதுண்டு. திரும்பி வருவதில்லை. அங்கேயே தஞ்சம் கோரி விடுகிறார்கள். 

Read more: ஜெனீவாவுக்குப் போதல்! (நிலாந்தன்)

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. 

Read more: சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும்- சில கேள்விகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் பிரதானமாவை. அப்படிப்பட்ட நிலையில், அந்தக் கட்சிகளை அரசாங்கத்துக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பிலான பேச்சுக்கள் கவனம் பெறுவது இயல்பானது. 

Read more: நல்லாட்சி சவாரியில் டக்ளஸும், தொண்டமானும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. 

Read more: சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?! (நிலாந்தன்)

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ''சுதேச நாட்டியம்' எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில், அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1946ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலம். 

Read more: யாழ்ப்பாணம்தான்; வாள்ப்பாணம் இல்லை?! (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்