கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளை அழைத்து சந்திப்பொன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் முதலாளியும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஊடக நிறுவனத்தின் முதலாளி, 2010 முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

Read more: தமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன? அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையிலேயே இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. 

Read more: தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்! (நிலாந்தன்)

கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா? ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம். இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம். எனவே தவராசாவை சுமந்திரன் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி ஒரு அணித் திரட்சி ஏற்படத் தொடங்கியது. அதோடு மாவை சேனாதிராசாவின் மகன் உட்பட ஒரு பகுதி கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு எதிராக திரள்வது போல ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவை உண்மையாகவே திரட்சிகளா ? அல்லது கட்சிக்கு வெளியே போகக் கூடிய அதிருப்தி வாக்குகளை கவர்வதற்கான உத்திகளில் ஒன்றா? 

Read more: கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்?! (நிலாந்தன்)

சில வாரங்களுக்கு முன்னர் பரபரப்பான இலங்கை அரசியல் புயலின் மத்தியில் எம்.ஏ.சுமந்திரன் அகப்பட்டிருந்தார். 56 வயதுள்ள அவர் ‘உண்மையுடன் சமுதிதா’ என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய சிங்கள மொழியிலான கேள்வி – பதில் அடிப்படையிலான நேர்காணலின் சில பகுதிகளை ஒரு தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. 

Read more: சுமந்திரனுக்கு எதிரான கூட்டமைப்பின் சதி! (டி.பி.எஸ்.ஜெயராஜ்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்; வாக்குத் திரட்சிக்காக போராடுவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுக்களுக்கும், குழிபறிப்புக்களுக்கும் எதிராக நின்று தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. 

Read more: சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா...” என்று ஆரம்பிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், “…தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...” என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். 

Read more: தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியலில் ‘மாற்றுத் தலைமை’ என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புக்களினாலேயே ‘நீக்கம்’ செய்யப்பட்டிருக்கின்றது என்பதுதான், வேதனையானது. 

Read more: சிதைந்த மாற்றுத் தலைமைக் களம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.