அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், வரவு- செலவுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 

Read more: கூட்டமைப்பு குட்டையாகத் தேங்கக்கூடாது! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? 

Read more: அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை; வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன! (நிலாந்தன்)

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு- வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். 

Read more: யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு! (புருஜோத்தமன் தங்கமயில்)

அகிம்சையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31வது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே பசியோடு சம்பந்தப்பட்டதுதான். ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அகிம்சையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபிற்கு மாத்திரமல்ல, அகிம்சைப் போராட்ட மரபிற்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். 

Read more: திலீபன் மீது சத்தியம் செய்வோம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ‘தமிழமுதம்’ என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. 

Read more: அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்! (நிலாந்தன்)

கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. 

Read more: திலீபன் – 2018: திரைப்பட விழாவும் இசை வேள்வியும்! (நிலாந்தன்)

திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமை கோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமை கோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும் பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. அது போலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இவ்வாறான சர்ச்சைகள் ஏன் ஏற்படுகின்றன? பின்வரும் காரணங்களைக் கூற முடியும். 

Read more: நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை! (நிலாந்தன்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்