இரு வாரகால அமெரிக்கப் பயணத்தை முடிந்துக் கொண்டு கடந்த வாரம் நாடு திரும்பிய கோட்டாய ராஜபக்ஷ ஒரு வெற்றி வீரனைப் போல விமான நிலையத்தில் வைத்து ஆதரவாளர்களினால் வரவேற்கப்பட்டார். இறுதிப் போரின் இறுதி நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கு அண்மித்த வரவேற்பொன்று கோட்டாபயவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. 

Read more: கோட்டாவின் இருமுனை வாள்; அவரை பாதுகாக்குமா அறுக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)

நாடு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. மாகாண சபைத் தேர்தல்களோ, பொதுத் தேர்தலோ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. கடந்த ஆண்டு ஒக்டோபர் சதிப்புரட்சியோடு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், பாராளுமன்றத்துக்குள்ளும் நீதிமன்றத்தினாலும் சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாமல் போனது. அப்போதைய பரபரப்பும் அடங்கியது. இந்த ஆண்டு முழுமையானதொரு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனாலும், ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாகிவிட்டது. 

Read more: விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் அணிகளின் இழுபறி! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நாடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் எள்ளல் தொனியிலான உரையாடலையும், தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 

Read more: உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது மாயாஜாலங்கள் நிகழ்ந்தால் ஒழிய அதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்ரமசிங்கவா, கரு ஜயசூரியவா அல்லது சஜித் பிரேமதாசவா போட்டியிடப்போகிறார்கள், என்பதுதான் இப்போதைய கேள்வி. 

Read more: கோட்டாவின் எழுச்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)

“மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.” இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

Read more: ஜெனீவா 2019 (நிலாந்தன்)

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா. தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனீவாவிலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனீவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது “விடியுமாமளவும் விளக்கனைய மாயையா”? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று தளங்களில் ஆராய வேண்டும். 

Read more: ஜெனீவாவில் தமிழர்கள்! (நிலாந்தன்)

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா. அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா?

Read more: ஐ.நா. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கிறதா?! (நிலாந்தன்)

More Articles ...

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.