“...சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன...” என்று திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். 

Read more: விக்கியின் வியாக்கியானங்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும்? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. 

Read more: தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? (நிலாந்தன்)

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும் மேலான அரசாட்சிக் கலையைப் பொருத்தவரையில், அதற்குச் சற்றும் தகுதியோ திறமையோ அற்ற மோசடிக் கூட்டமொன்றையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். “ -பிளேட்டோ 

Read more: மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?! (நிலாந்தன்)

அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி; சமாதானம்; யுத்த நிறுத்தம்; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள்; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள்; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”. 

Read more: புனிதமிழந்த கோஷங்கள்! (நிலாந்தன்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும், காங்கிரஸையும் நோக்கி இந்தப் பத்தியாளரினால் ஏற்கனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, கடந்த திங்கட்கிழமை யாழ். நகரப் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட “...எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு...” என்கிற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது. 

Read more: கஜனிடம் சில கேள்விகள்...! (புருஜோத்தமன் தங்கமயில்)

‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவரான) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் வெளியிட்ட கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

Read more: தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“...மனோ கணேசன் தன் முன்னாலுள்ள தடைகளை இம்முறை தாண்டிக் குதித்துவிடுவாரா? கொழும்பு ஒரு தமிழரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?” என்றொரு கேள்வி அண்மையில் என்னுடைய கொழும்பு நண்பர் ஒருவரால் எழுப்பப்பட்டது. 

Read more: மனோ கணேசன் இம்முறை தடைகளைத் தாண்டிவிடுவாரா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'