இலங்கை அரசியலமைப்பில் 18வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாட்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டம்பர் 08, 2010இல் 18வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள். 

Read more: 20வது திருத்தத்தினூடான ராஜபக்ஷக்களின் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. 

Read more: கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)

தேர்தல் அரசியல் என்பது பரமபத (ஏணியும் பாம்பும்) விளையாட்டு போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும், எதிர்த்தரப்புக்களும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காக பாம்புகளாக காத்துக் கொண்டிருக்கும். அப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே பரமபதம் ஆடி தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும் இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாக தோற்றிருக்கிறார்கள். 

Read more: தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" 

Read more: கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு? (புருஜோத்தமன் தங்கமயில்)

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. 

Read more: காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி! (நிலாந்தன்)

இம்முறை தமிழ் மக்கள், கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை பாராளுமன்றத்துக்கு செல்கின்றார்கள். மாற்று அணியை பொறுத்தவரை இது வெற்றியின் தொடக்கம். தமிழ் அரசியலை பொறுத்தவரை இது மாற்றத்தின் தொடக்கமாக அமையுமா? 

Read more: மாற்று அணிக்கு முன்னாலுள்ள பணி! (நிலாந்தன்)

எண்ணிய முடிதல் வேண்டும் என்றான் பாரதி. எண்ணித் துணி கருமம் என்றார் அய்யன் வள்ளுவர். அதன் வழி எண்ணித் துணிந்த பணியென அமைந்தது 4தமிழ்மீடியா!. 

Read more: எண்ணிய முடிதல் வேண்டும் !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.