தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை. இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஷங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை.இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஷமாகிய “தூய கரம் தூய நகரம்” என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது.அதுபோல சங்கரி-சுரேஸ்-சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் “மாவை வைத்திருக்கும் ஐந்து தம்பிகள்” என்ற கதை அதிகம் கேட்டுச் சிரிக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். இப்படி ஆக்கத்திறன் மிக்க அல்லது சிரிக்கத் தூண்டும் சூடான பிரச்சாரப் போரை தேர்தல் களத்திற் பரவலாகக் காண முடியவில்லை. 

Read more: வீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்! (நிலாந்தன்)

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கிறது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி தமிழ் மக்கள் பேரவையும், சில புலம்பெயர் தரப்புக்களும் இணைகின்றன.) சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் இணைந்தாலும், அவர்களுக்கு இடையில் தெளிவான புரிதலும், கூட்டுணர்வும் இல்லாத நிலையில் எதிர்முனையும் பல கூறுகளாக பிரிந்தே கிடக்கின்றது. 

Read more: சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது. 

Read more: முன்னணியின் முக்கியமான மாற்றம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சம் எழுகின்றது. 

Read more: வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கொழும்பில் கொட்டாஞ்சேனையில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே பாராளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

Read more: உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்த் தலைமைகளும்! (நிலாந்தன்)

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது, கேள்வி- பதில் அறிக்கையாக வெளியாகி வருகின்றது. 

Read more: விக்னேஸ்வரனின் தடுமாற்றம்; அறிக்கைகளை முன்வைத்து! (புருஜோத்தமன் தங்கமயில்)

தேர்தல் அரசியல் அம்மணமானது; மற்றவரை அம்மணமாக்குவது. தமிழ்த் தேசிய அரசியலும் தேர்தல்களைப் பிரதானமாக முன்னிறுத்திய அநேக தருணங்களில் அதனையே பிரதிபலித்து வந்திருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தித் திறந்துள்ள தற்போதைய அரங்கிலும், அம்மணமாக்கும் ஆட்டமும் அம்மணமாகும் ஆட்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

Read more: அம்மண அரசியல்: உள்ளூராட்சித் தேர்தல் காட்சிகளை முன்வைத்து! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்